பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : செப் 25, 2021
Share
Advertisement
நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்கணும்!மணவாள நகர்: மணவாள நகர் அடுத்த பெரிய குப்பம் தனியார் பள்ளியில், திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.இதில், கடம்பத்துார் வழியாக திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம், மணவூர், தக்கோலம் வழியாக நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க வேண்டும்.கொரோனா வைரஸ் பரவலில், ஷேர் ஆட்டோக்களில் சமூக

நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்கணும்!

மணவாள நகர்: மணவாள நகர் அடுத்த பெரிய குப்பம் தனியார் பள்ளியில், திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.இதில், கடம்பத்துார் வழியாக திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம், மணவூர், தக்கோலம் வழியாக நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க வேண்டும்.கொரோனா வைரஸ் பரவலில், ஷேர் ஆட்டோக்களில் சமூக இடைவெளி இல்லாமல் பயணியர் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கல்வி கற்க விழிப்புணர்வு

மேல்நல்லாத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சியில், மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 'கற்போம் எழுதுவோம்' இயக்ககத்தினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இந்திரா மற்றும் ஆதிரைநற்பவி ஆகியோர் பங்கேற்றனர். பொதுமக்களிடையே பாடல் மற்றும் நாடகம் வாயிலாக கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊட்டச்சத்து திருவிழா

மேல்நல்லாத்துார்: மேல்நல்லாத்துார் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து நிகழ்ச்சி நடந்தது.'போஷன் அபியான்' திட்டத்தின் கீழ் நடந்த இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் கந்தசாமி தலைமையில் ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. காய்கறிகளின் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சி, சின்னகளக்காட்டூர் கிராமத்தில், சத்துணவு பணியாளர்கள் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X