அரசு மருத்துவமனையில் சுகாதாரம் இல்லை: ஊருக்கு மட்டும் உபதேசத்தால் நோயாளிகள் அதிருப்தி

Added : செப் 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சியிலுள்ள, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகாவில் இருந்து தினமும், ஆயிரக்கணக்கானநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.அவசர சிகிச்சைபிரிவு, எக்ஸ்ரே மற்றும் இதர சோதனைகள், பல் மருத்துவம், கொரோனா சிகிச்சை என, பலவித சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல்
 அரசு மருத்துவமனையில் சுகாதாரம் இல்லை: ஊருக்கு மட்டும் உபதேசத்தால் நோயாளிகள் அதிருப்தி

பொள்ளாச்சி;பொள்ளாச்சியிலுள்ள, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகாவில் இருந்து தினமும், ஆயிரக்கணக்கானநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.அவசர சிகிச்சைபிரிவு, எக்ஸ்ரே மற்றும் இதர சோதனைகள், பல் மருத்துவம், கொரோனா சிகிச்சை என, பலவித சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல் அலட்சியமாக உள்ளதால், காணும் இடமெல்லாம் முகம் சுழிக்க வைக்கிறது.மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில், மருத்துவக்கழிவுகள் மற்றும் நோயாளிகள் பயன்படுத்தும் குப்பை குவிந்துள்ளது. முக்கிய இடங்களில் கிருமிநாசினி வைக்கப்படாமலும், குடிநீர் வசதி குறைவாகவும் உள்ளது.நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட பஞ்சு, ரத்தத்துடன் பாதுகாப்பின்றி வெட்ட வெளியில் குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யும் இடத்தில், பயன்படுத்தப்பட்ட மாதிரி சேகரிக்கும் குடுவைகளும், சிறுநீருடன் சுகாதாரமற்ற முறையில் கிடக்கிறது.இத்தனை பிரச்னைகள் இருந்தும் அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளதால், மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சிகிச்சைக்காக வரும் மக்கள் முகம் சுழிக்கின்றனர்.மருத்துவமனை வளாகத்தை சுகாதாரத்துடன் பராமரிக்காததால், மக்களுக்கு பல வித நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. சுகாதாரத்துறையினர் மருத்துவமனை வளாகத்தை சுத்தமாகபராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகண்காணிப்பாளர் கலைச்செல்வி கூறுகையில், ''மருத்துவமனை வளாகத்திலுள்ள குப்பையை அகற்ற, பொள்ளாச்சிநகராட்சிக்கு தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் குப்பைஅகற்றப்படும்.தினமும், காலை முதல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மதியம், 12:00 மணிக்கு மேல் தான், சிறுநீர் மாதிரி குடுவைகள் சுத்தம் செய்யப்படும். மருத்துவமனை வளாகத்தை துாய்மைப்படுத்தி, ஆரோக்கியமாக பராமரிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.மருத்துவமனையே இப்படி இருந்தா எப்படி?பொள்ளாச்சியில், தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் அரசுமருத்துவமனையை மட்டுமே நம்பி வரும் நிலையில், சுகாதார பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி சோப் போட்டு கை கழுவ வேண்டும்,கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், குப்பையை அகற்றி சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என, கொரோனா பரவும் இக்காலகட்டத்தில் அரசு வலியுறுத்தி வருகிறது.இந்த உபசேதம் ஊருக்கு மட்டுமே பொருந்தும் என்பது போன்று, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அலட்சிய போக்கு கடைபிடிப்பதால், இங்கு வரும் மக்களுக்கு நோய்கள் பரவும் சூழல் உருவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X