முகாமில் விண்ணப்பங்கள் பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முகாமில் விண்ணப்பங்கள் பதிவு

Added : செப் 25, 2021
Share
மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதி விவசாயிகளுக்கு, சிறு, குறு விவசாயி சான்றிதழ் விரைந்து வழங்கவும், மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க பதிவு செய்யவும், தோட்டக்கலைத்துறையினரால் கண்ணாடிப்புத்துார் மற்றும் பாப்பான்குளத்தில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் நடந்த இந்த முகாமில், பல கிராமப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். சிறு

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதி விவசாயிகளுக்கு, சிறு, குறு விவசாயி சான்றிதழ் விரைந்து வழங்கவும், மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க பதிவு செய்யவும், தோட்டக்கலைத்துறையினரால் கண்ணாடிப்புத்துார் மற்றும் பாப்பான்குளத்தில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் நடந்த இந்த முகாமில், பல கிராமப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். சிறு குறு விவசாயி சான்றிதழ் வழங்க பாப்பான்குளத்தில் 34ம், கண்ணாடிப்புத்துாரில், 10 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டன.இதோடு, தோட்டக்கலை பயிர்களான தக்காளி, வெங்காயம், மிளகாய், வெண்டை, கத்தரி, பூசணி வகைகள், தர்பூசணி, அவரை, முருங்கை, பந்தல் காய்கறி பயிர்கள், ஆகியவற்றிற்கும் பணப்பயிர்களான மா, கொய்யா, வாழை, பப்பாளிக்கும், தென்னை மற்றும் ஊடுபயிர் செய்யும் காய்கறி வகைகளுக்கு, நுண்ணீர் பாசனம் அமைக்க, இரண்டு முகாம்களிலும் சேர்த்து, 25 ஏக்கர் பரப்பிற்கு விவசாயிகள் விண்ணப்பம் கொடுத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X