சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினருக்கு தொகுப்பு வீடு: அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:'வால்பாறை கல்லார்குடி பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும்,' என வலியுறுத்தி, பொள்ளாச்சியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தின் முன், நேற்று, வால்பாறை கல்லார்குடி பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்,
 பழங்குடியினருக்கு தொகுப்பு வீடு: அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி:'வால்பாறை கல்லார்குடி பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும்,' என வலியுறுத்தி, பொள்ளாச்சியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தின் முன், நேற்று, வால்பாறை கல்லார்குடி பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், இ.கம்யூ., ம.கம்யூ., காங்., உள்பட பல கட்சியினர் பங்கேற்றனர்.கட்சியினர் பேசியதாவது:வால்பாறை கல்லார்குடி செட்டில்மென்ட் பகுதியில், காடர் இனத்தை சேர்ந்த பழங்குடியினர் வசிக்கின்றனர். கடந்த, 2019ல் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு, குடிசைகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. அதில், வீடுகள், உடமைகளை மக்கள் இழந்தனர். தற்போது, அருகிலுள்ள தனியார் எஸ்டேட் குடியிருப்பில் சிரமத்துக்கு இடையே, தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரவும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தவும், அரசும், வனத்துறையும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளது. வன உரிமைச்சட்டத்தின் படி, தெப்பக்குளம் மேடு பகுதியில் அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்; அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு, பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X