பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை ஆதார விலை

Added : செப் 25, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கொப்பரை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், கிலோவுக்கு, 150 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு தென்னை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு சார்பில், மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், கோவை மாவட்டத்தில் மட்டும், 85 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில்,

கிணத்துக்கடவு:கொப்பரை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், கிலோவுக்கு, 150 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு தென்னை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு சார்பில், மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், கோவை மாவட்டத்தில் மட்டும், 85 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. தேங்காய் உற்பத்தியில், பெருமளவு கொப்பரையாக மாற்றப்பட்டு, தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து விற்கப்படுகிறது.கொப்பரை கிலோவுக்கு, 150 ரூபாய் ஆதார விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. மத்திய அரசு, 103.35 ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக அறிவித்துள்ளது.தற்போது, கூலி உயர்வு, உரம் விலை உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. கொப்பரைக்கு உற்பத்தி செலவாக கிலோவுக்கு, 141.18 ரூபாய் ஆகிறது. எனவே, வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து, அரசு மற்றும் வேளாண்மை துறைக்கு கொப்பரை உற்பத்தி செலவினத்தை அதிகரித்து பெற்றுத்தர ஆவன செய்ய வேண்டும்.மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தில் இருந்தும், கொப்பரை உற்பத்தி செலவு விபரங்களை மத்திய அரசிடம் தெரிவித்து, கிலோவுக்கு, 150 ரூபாய் ஆதார விலை வழங்க பரிந்துரைக்க வேண்டும். இதற்கு, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X