சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டருக்கு ஜாமின் அளித்த விவசாயி: ஊழியர்கள் மிரட்டலால் தற்கொலை

Added : செப் 25, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : டிராக்டர் வாங்க உறவினருக்கு முன்ஜாமின் அளித்த விவசாயி, கடன் கொடுத்த நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த, வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் மகன் மனோகர், 40; மாற்றுத்திறனாளி. முன்ஜாமின்விவசாயியான இவர், உறவினர் ஒருவருக்கு டிராக்டர் எடுக்க, டிராக்டர் நிறுவனத்துக்கு முன்ஜாமின்

வாலாஜாபாத் : டிராக்டர் வாங்க உறவினருக்கு முன்ஜாமின் அளித்த விவசாயி, கடன் கொடுத்த நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த, வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் மகன் மனோகர், 40; மாற்றுத்திறனாளி. முன்ஜாமின்விவசாயியான இவர், உறவினர் ஒருவருக்கு டிராக்டர் எடுக்க, டிராக்டர் நிறுவனத்துக்கு முன்ஜாமின் அளித்தார்.டிராக்டர் கடன் பெற்ற உறவினர், கடன் தவணை தொகையை செலுத்தவில்லை. இதனால் ஜாமின் அளித்த மனோகரை, கடன் தொகை கட்ட வேண்டும் என, நிறுவன ஊழியர்கள் மிரட்டி உள்ளனர்.

இதில் மனமுடைந்த மனோகர், நேற்று முன்தினம் விஷம் குடித்து, காஞ்சிபுரம் நசரத்பேட்டை பகுதியில் இயங்கும், டிராக்டர் நிறுவனத்தின் முன் மயங்கி விழுந்தார்.அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வழக்கு பதிவு தீவிர சிகிச்சை பிரிவில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X