பொது செய்தி

தமிழ்நாடு

கேரள வாடல் நோய்க்கு நிவாரணம் கொடுங்க! 'ஆன்லைன்' குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

Added : செப் 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;'பொள்ளாச்சி தாலுகா முழுவதிலும், தென்னையில் கேரள வாடல் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளதால், நிவாரணம் வழங்க வேண்டும்,' என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.பொள்ளாச்சி தெற்கு, வடக்கு மற்றும் ஆனைமலை ஒன்றியத்தில் நேற்று, 'ஆன்லைன்' வாயிலாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில், அனைத்து பகுதி விவசாயிகளும், மாவட்ட நிர்வாகம் மற்றும்

பொள்ளாச்சி;'பொள்ளாச்சி தாலுகா முழுவதிலும், தென்னையில் கேரள வாடல் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளதால், நிவாரணம் வழங்க வேண்டும்,' என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.பொள்ளாச்சி தெற்கு, வடக்கு மற்றும் ஆனைமலை ஒன்றியத்தில் நேற்று, 'ஆன்லைன்' வாயிலாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில், அனைத்து பகுதி விவசாயிகளும், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண், தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் நடந்த கூட்டத்தில், திருமூர்த்தி நீர் திட்டக்குழுத்தலைவர் பரமசிவம் பேசியதாவது:பாசன கால்வாய்களுக்கு குடிமராமத்து திட்ட நிதி ஒதுக்கப்படாமல் உள்ளதால், ஒன்றியங்கள் சார்பில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் வாயிலாக கால்வாய்களை சுத்தப்படுத்த வேண்டும்.பொள்ளாச்சி தாலுகா முழுவதிலும், தென்னை மரங்களில் கேரள வாடல் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளதால், உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தேங்காய் எண்ணெய்க்கு மத்திய அரசு உயர்த்தியுள்ள, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.ஆவல்பட்டியில், பி.ஏ.பி., பிரதான கால்வாயில் தண்ணீர் திருடப்பட்டு, லாரிகளில் விற்பனை செய்யப்படுகிறது; இதை தடுக்க வேண்டும். பி.ஏ.பி., கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.ஆனைமலை ஒன்றியத்தில் நடந்த கூட்டத்தில், 'பி.ஏ.பி., பாசன கால்வாய் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், விவசாயிகள், அதிகாரிகள் கால்வாய்களை சுத்தம் செய்யவும், பார்வையிடவும் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. வழித்தடங்களை மீட்க வேண்டும்.அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரை, குளங்களுக்கு கூடுதலாக வழங்கினால் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். குளப்பத்துகுளம் பாசனம் பெறும் நெல் விவசாயிகளுக்கு, 600க்கும் மேற்பட்ட ஏக்கரில் வழித்தட பிரச்னை நிலவுகிறது. வழித்தட பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்,' என, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X