பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா இல்லை: அலட்சியத்தை உணருமா ரயில்வே நிர்வாகம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் ஒரு இடத்தில் கூட கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாமல் உள்ளது. அதிநவீன கேமராக்கள் பொருத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி ரயில் வழித்தடங்கள், அகல ரயில் பாதையாக மேம்படுத்தப்பட்டு, ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள், மூன்று பயணிகள் ரயில்கள்
 ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா இல்லை: அலட்சியத்தை உணருமா ரயில்வே நிர்வாகம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் ஒரு இடத்தில் கூட கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாமல் உள்ளது. அதிநவீன கேமராக்கள் பொருத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி ரயில் வழித்தடங்கள், அகல ரயில் பாதையாக மேம்படுத்தப்பட்டு, ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள், மூன்று பயணிகள் ரயில்கள் இயங்கின. தற்போது, சென்னை எக்ஸ்பிரஸ், மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயகப்படுகின்றன.தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்கின்றனர். கோவை, பாலக்காடு உள்பட பல பகுதிகளுக்கு வேலைக்குச் செல்லும், நுாற்றுக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களை, ரயில்வே ஸ்டேஷன் 'பார்க்கிங்' பகுதியில் நிறுத்திச் செல்கின்றனர்.இந்நிலையில், 'பிளாட்பார்ம்', ரயில்வே ஸ்டேஷன் வளாகம், 'பார்க்கிங்' உட்பட ரயில்வே ஸ்டேஷனில் எந்தப்பகுதியிலும், ரயில்வே நிர்வாகத்தினர் ஒரு கண்காணிப்பு கேமரா கூட பொருத்தவில்லை; அலட்சியமாக உள்ளனர்.இதனால், வாகனங்கள் திருடப்பட்டாலும், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தாலும், வீடியோ காட்சிகளை ஆவணமாக காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் பல முறை செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, ரயில்வே நிர்வாகத்தினர், 2018 நவ., மாதம் கேமராக்கள் பொருத்த வேண்டிய இடங்களை தேர்வு செய்தனர். ஆனால், இதுவரையில் கேமராக்கள் பொருத்தாமல் மெத்தனமாக உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன், சென்னை தாம்பரம் ரயில் நிலைய நுழைவுவாயிலில், பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கடந்த, 2017ல் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.இச்சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிய, கண்காணிப்பு கேமரா காட்சிகள் போலீசாருக்கு பெரும் உதவியாக இருந்தன. தற்போதைய சூழலில், சிறிய வகை கடைகளில் கூட, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள நிலையில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் கேமராக்கள் இல்லாதது வேடிக்கையாக உள்ளது.பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவாக காட்சிகளை பதிவு செய்யும் வகையில், ரயில்வே ஸ்டேஷனில் முக்கிய பகுதிகளில், அதிநவீன 'நைட் விஷன்' கேமராக்கள் பொருத்த ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X