பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வெறும் பேச்சு தான்! 'மாஜி' அமைச்சர்

Added : செப் 25, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் ஒன்றிய அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன், காஞ்சிபுரம் அடுத்த கருக்குப்பேட்டையில் பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'நீட்' தேர்வு ரத்து செய்வோம் என்றனர். பதிலாக, நீட் தேர்வு வேண்டாம் என தீர்மானம் போடுகின்றனர்.இந்த தீர்மானத்தை ஏற்கனவே நாங்கள்

வாலாஜாபாத் ஒன்றிய அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன், காஞ்சிபுரம் அடுத்த கருக்குப்பேட்டையில் பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'நீட்' தேர்வு ரத்து செய்வோம் என்றனர். பதிலாக, நீட் தேர்வு வேண்டாம் என தீர்மானம் போடுகின்றனர்.

இந்த தீர்மானத்தை ஏற்கனவே நாங்கள் போட்டுவிட்டோம். மேலாக, அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 7.5 சதவீதம், நீட் தேர்வில் இட ஒதுக்கீடு தந்தோம். தி.மு.க.,வின் வெறும் பேச்சுகளை நம்பி, தி.மு.க.,விற்கு யாரும் ஓட்டுப்போட வேண்டாம். இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளித்து எங்கள் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் கரகரத்த குரலில் பேசியது, அங்கிருந்த மக்களுக்கு பெரிதாக புரியவில்லையாம். அதனால் கட்சி தொண்டர்களிடம் அமைச்சர் என்ன பேசினார் என கேட்டு புரிந்து கொண்டனராம்.அ.தி.மு.க.,வின் கூட்டத்தால் செங்கல்பட்டு சாலையில் செல்லும் வாகனங்கள் அய்யன்பேட்டை கிராமம் வரை அணிவகுத்து நின்றன. காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் 20 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X