நகர நுழைவாயிலில் குப்பை கிடங்கான ரோடு: உள்ளாட்சி அமைப்புகள் மோதலால் பாதிப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை-பொள்ளாச்சி ரோட்டில், நகர எல்லையை ஒட்டிய பகுதிகளில், இரு புறமும் பல கி.மீ., துாரத்திற்கு, கட்டடக்கழிவுகள், பிளாஸ்டிக்கழிவுகள், சுண்ணாம்பு, சிமென்ட் உள்ளிட்ட தொழிற்சாலை கழிவுகள் மற்றும கோழி, மீன், இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகிறது.இதனால், துர்நாற்றம் மற்றும் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைப்பதால் புகை மூட்டமாக மாறி

உடுமலை:உடுமலை-பொள்ளாச்சி ரோட்டில், நகர எல்லையை ஒட்டிய பகுதிகளில், இரு புறமும் பல கி.மீ., துாரத்திற்கு, கட்டடக்கழிவுகள், பிளாஸ்டிக்கழிவுகள், சுண்ணாம்பு, சிமென்ட் உள்ளிட்ட தொழிற்சாலை கழிவுகள் மற்றும கோழி, மீன், இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகிறது.இதனால், துர்நாற்றம் மற்றும் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைப்பதால் புகை மூட்டமாக மாறி வருகிறது.கட்டடக்கழிவுகள், காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து வருகிறது. உடுமலை நகரம் துவங்கி, முக்கோணம் வரை, ஐந்து கி.மீ., துாரம், இரு புறமும் மலை போல கழிவுகள் தேங்கியுள்ளன.இதனால், நகருக்குள் நுழையும் பகுதி, கடும் துர்நாற்றம், சுகாதாரக்கேடு என பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. நகராட்சி எல்லையாக உள்ள நிலையில், குப்பை கொட்டப்படும் இடம், கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான பகுதி என, நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் யார் அகற்றுவது என்ற போட்டியில், நகரின் மேற்கு நுழைவாயில் பகுதி சுகாதார கேடு நிறைந்த மையமாக மாறியுள்ளது.எனவே, நகர எல்லையாக உள்ளதால் நகராட்சியும், கணக்கம்பாளையம் ஊராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து, மலைபோல் குவிந்துள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.இப்பகுதியில், குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில், கம்பி வேலி, பூங்கா அமைத்தல், கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாவலர்களை நியமித்து கழிவுகளை கொட்டும் வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X