பொது செய்தி

தமிழ்நாடு

செம 'குஷி'யில் பெண் வேட்பாளர்

Added : செப் 25, 2021
Share
Advertisement
களக்காட்டூர், காலுார், கீழ்பெரமநல்லுார் என மூன்று ஊராட்சிகளை உள்ளடக்கியது காவலுார் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடம். 5,000த்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் உள்ளன.காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் ராஜு. இவருக்கு கட்சி சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.அதே பகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த காலுார் ஊராட்சி முன்னாள் தலைவர், அ.தி.மு.க.,வைச்

களக்காட்டூர், காலுார், கீழ்பெரமநல்லுார் என மூன்று ஊராட்சிகளை உள்ளடக்கியது காவலுார் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடம். 5,000த்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் உள்ளன.காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் ராஜு. இவருக்கு கட்சி சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.அதே பகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த காலுார் ஊராட்சி முன்னாள் தலைவர், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அசோகனுக்கு சீட் வழங்கப்படவில்லை. கட்சி தலைமை அவரை கண்டு கொள்ளாததால், ராஜுவுக்கு எதிராக தன் மகளை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.இதே வார்டில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வசந்தி, 'ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பதைபோல், அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள அடிதடியால் நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என ஏக 'குஷி'யில் இருக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X