ஒரு கை பார்க்கும் தி.மு.க., பிரமுகர் கட்சியா, எதிரியா...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு கை பார்க்கும் தி.மு.க., பிரமுகர் கட்சியா, எதிரியா...

Added : செப் 25, 2021
Share
திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம் ஊராட்சி, அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரிய பகுதியுடன் இணைந்தது. 15 வார்டுகளில் 18 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன.இதன் ஊராட்சி தலைவர் பதவி, ஆதிதிராவிடர் பெண் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால், திருப்போரூர் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தனபால் மனைவி காயத்ரியை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.தி.மு.க., பிரமுகர் - கல்பாக்கம் ஒப்பந்ததாரர்

திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம் ஊராட்சி, அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரிய பகுதியுடன் இணைந்தது. 15 வார்டுகளில் 18 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன.இதன் ஊராட்சி தலைவர் பதவி, ஆதிதிராவிடர் பெண் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால், திருப்போரூர் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தனபால் மனைவி காயத்ரியை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.தி.மு.க., பிரமுகர் - கல்பாக்கம் ஒப்பந்ததாரர் தாமோதரன், மனைவி அம்சாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.இவருக்கும், இவ்வூராட்சி தலைவராக இருமுறை பதவி வகித்த, தி.மு.க., பிரமுகர் பக்கீர் முகமதுவிற்கும் ஏழாம் பொருத்தம். எப்போதும் கோஷ்டி தகராறு தான்.மனைவியை ஜெயிக்க வைக்க தாமோதரன் முயற்சி செய்யும் நிலையில், தன் பலத்தை நிரூபிக்க, சலவை தொழிலாளி ராணி என்பவரை, தலைவர் பதவி வேட்பாளராக பக்கீர் முகமது நிறுத்தியுள்ளார்.பண பலம், செல்வாக்கு படைத்த வேட்பாளர்களை எதிர்த்து, சாதாரண சலவை தொழிலாளியை சுயேச்சையாக போட்டியிட வைப்பது வியப்பாக உள்ளது. இவரை வெற்றி பெற வைப்பது பக்கீர் முகமதுவின் முயற்சியா அல்லது ஓட்டுகளை பிரித்து தன் எதிரியை தோற்கடிப்பதா என்பதே பெரும் விவாதமாக இருக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X