சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் காரணமாக ரவுடி வீடுகளில் ஆய்வு

Added : செப் 25, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை செய்தனர்.கொலை வழக்கில் தொடர்புடைய 210 பேரின் வீடுகளில் நடந்த சோதனையில் எட்டு கத்தி, இரும்பு ராடு போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனையில் 82 பேரை பிடித்து

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை செய்தனர்.

கொலை வழக்கில் தொடர்புடைய 210 பேரின் வீடுகளில் நடந்த சோதனையில் எட்டு கத்தி, இரும்பு ராடு போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனையில் 82 பேரை பிடித்து விசாரணை நடந்து வருகிறது.இதில் தலைமறைவாக இருந்து கொண்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 64 ரவுடிகள், ஓராண்டு நன்னடத்தையில் இருக்குமாறு விடுவிக்கப்பட்டனர். அந்த ரவுடிகள் தொடந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X