சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காத்திருப்பு போராட்டம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Added : செப் 25, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே கொமரலிங்கத்தில், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டதுகொமரலிங்கம் பகுதியில் வசிக்கும், 90 பயனாளிகளுக்கு, கடந்த 2017ம் ஆண்டு இலவச பட்டா வழங்கப்பட்டது. தங்களுக்கான நிலத்தை அளந்து விட வேண்டுமென, இவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மடத்துக்குளம் வருவாய்த்துறையினர், கொமரலிங்கம் - பெருமாள்புதுார் ரோடு ஓரம் உள்ள
 காத்திருப்பு போராட்டம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே கொமரலிங்கத்தில், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டதுகொமரலிங்கம் பகுதியில் வசிக்கும், 90 பயனாளிகளுக்கு, கடந்த 2017ம் ஆண்டு இலவச பட்டா வழங்கப்பட்டது.

தங்களுக்கான நிலத்தை அளந்து விட வேண்டுமென, இவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மடத்துக்குளம் வருவாய்த்துறையினர், கொமரலிங்கம் - பெருமாள்புதுார் ரோடு ஓரம் உள்ள ஒரு இடத்தை வழங்குவதாக உறுதியளித்தனர்.ஆனால், இன்று வரை அவர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இவர்கள் தங்களுக்கு வழங்குவதாக கூறிய அந்த இடத்தில், நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: எங்களுக்கு வழங்கிய இலவச பட்டாவில் குறிப்பிட்டுள்ள இந்த இடத்தை, பயனாளிகளுக்கு அளந்து வரையறை செய்து கொடுக்க, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.இன்று (நேற்று) காலை இங்கு காத்திருப்பு போராட்டம் தொடங்கிய போது, கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்து விட்டோம். ஆனால் மாலை வரை காத்திருந்தும், எந்த அதிகாரிகளும் வரவில்லை. இதனால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.பல மணி நேரம் காத்திருந்த மக்கள், எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால், அவர்களாகவே கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X