பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் கால்வாய்கள் துார் வாரி பராமரிப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : மழைவெள்ள பாதிப்பைத் தவிர்க்க, நீர்நிலை, நெடுஞ்சாலை பகுதி கால்வாயில் மண்டியிருந்த புதர் அகற்றப்பட்டது.வடகிழக்கு பருவ மழையின்போது, மழைவெள்ளம் பெருக்கெடுக்கும். வடிகால்வாய், நீர்நிலை கால்வாய்கள் துார்ந்து, மழை நீர் செல்ல இயலாமல் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படும்.தற்போது வெப்பச் சலனத்தால், அவ்வப்போது மழை பெய்கிறது, வடகிழக்கு பருவ மழை காலமும்

மாமல்லபுரம் : மழைவெள்ள பாதிப்பைத் தவிர்க்க, நீர்நிலை, நெடுஞ்சாலை பகுதி கால்வாயில் மண்டியிருந்த புதர் அகற்றப்பட்டது.

வடகிழக்கு பருவ மழையின்போது, மழைவெள்ளம் பெருக்கெடுக்கும். வடிகால்வாய், நீர்நிலை கால்வாய்கள் துார்ந்து, மழை நீர் செல்ல இயலாமல் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படும்.தற்போது வெப்பச் சலனத்தால், அவ்வப்போது மழை பெய்கிறது, வடகிழக்கு பருவ மழை காலமும் துவங்கவுள்ளது.

இந்நிலையில், மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க, கால்வாய்களை துார் வாரி பராமரிக்க, அரசு அறிவுறுத்தியது.இதையடுத்து உள்ளாட்சி நிர்வாகங்கள், அந்தந்த பகுதி வடிகால்வாய், நீர்நிலை கால்வாய்களில் துார் வாரின.மாமல்லபுரம் அடுத்த எச்சூர் பகுதி திருக்கழுக்குன்றம் சாலையில், பாலத்தின் கீழ் பகுதி கால்வாய் துார் வாரி சீரமைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X