பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு; தவிப்பில் விசைத்தறியாளர்கள்

Added : செப் 25, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி:கோவை, திருப்பூர் மாவட்டத்தில், விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. புதிய கூலி உயர்வு வாயிலாக நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும் என்ற அடிப்படையில், விசைத்தறி சங்கத்தினர், 60 சதவீத கூலி உயர்வு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்காக, இரு மாவட்ட கலெக்டர்களிடம் மனு அளித்தனர். இரு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் நேற்று வரை,

கருமத்தம்பட்டி:கோவை, திருப்பூர் மாவட்டத்தில், விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. புதிய கூலி உயர்வு வாயிலாக நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும் என்ற அடிப்படையில், விசைத்தறி சங்கத்தினர், 60 சதவீத கூலி உயர்வு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்காக, இரு மாவட்ட கலெக்டர்களிடம் மனு அளித்தனர். இரு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் நேற்று வரை, எட்டு முறை பேச்சுவார்த்தை நடந்தது. அவற்றில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறியதாவது:கோவை தொழிலாளர் நல அலுவலக அதிகாரிகள் முன்னிலையில், எட்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடந்தது. இதுவரை பேச்சுவார்த்தையில் பங்கேற்காத சோமனூர் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் சிலர் பங்கேற்றனர். ஆனால், முடிவு எட்டப்படவில்லை. இதனால், பேச்சுவார்த்தையை வரும், அக்., 22ம் தேதிக்கு அதிகாரிகள் ஒத்தி வைத்துள்ளனர். முழுமையாக அனைத்து பகுதி ஜவுளி உற்பத்தியாளர்களும் பங்கேற்று, புதிய கூலியை இறுதி செய்தால் தான் தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X