பொது செய்தி

தமிழ்நாடு

சனிக்கிழமை வந்தால் சந்தை ஞாபகம்: அனுமதிக்கு வியாபாரிகள் 'வெயிட்டிங்'

Added : செப் 25, 2021
Share
Advertisement
அன்னுார்:வார சந்தை நடத்த அனுமதிக்க, சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அன்னுாரில் ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை வார சந்தை நடந்து வந்தது. இதில், அன்னுார், மேட்டுப்பாளையம், காரமடை, கோவில்பாளையம், கருவலுார், புளியம்பட்டியை சேர்ந்த, 400 வியாபாரிகளும், விவசாயிகளும் பொருட்களை விற்பனை செய்வர்.சுற்றுவட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் வந்து,

அன்னுார்:வார சந்தை நடத்த அனுமதிக்க, சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அன்னுாரில் ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை வார சந்தை நடந்து வந்தது. இதில், அன்னுார், மேட்டுப்பாளையம், காரமடை, கோவில்பாளையம், கருவலுார், புளியம்பட்டியை சேர்ந்த, 400 வியாபாரிகளும், விவசாயிகளும் பொருட்களை விற்பனை செய்வர்.சுற்றுவட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் வந்து, காய்கறி, பழங்கள், மளிகை, ஆடு, கோழி ஆகியவற்றை வாங்கி சென்றனர். கொரோனா காரணமாக கடந்த நான்கு வாரங்களாக வார சந்தை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.அன்னுார் சந்தையின் சிறு வியாபாரிகள் கூறியதாவது:தற்போது, கொரோனா பரவல் பெருமளவில் குறைந்துள்ளது, பெரும்பாலான மாவட்டங்களில் சந்தை நடக்கிறது. நமது மாவட்டத்திலேயே கணேசபுரம், பொன்னேகவுண்டன் புதுார் உட்பட பல ஊர்களில் சந்தை நடக்கிறது. ஆனால், அன்னுாரில் சந்தை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் வார சந்தை வியாபாரத்தை நம்பியுள்ள எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக வந்து இங்கே விற்பனை செய்து வந்தனர். பொதுமக்கள், வெளிச்சந்தையில் கூடுதல் விலை கொடுத்து காய்கறி மற்றும் இதர பொருட்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆடு, கோழி வளர்ப்போர், சந்தை இல்லாததால் மிகக் குறைந்த விலைக்கு ஆடு, கோழிகளை விற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் நலன் கருதி, அன்னுாரில் சனிக்கிழமை வாரசந்தை நடத்த அனுமதிக்க வேண்டும்.இதில் சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல் உட்பட விதிமுறைகளை தவறாமல் பின்பற்றுவோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். கோரிக்கைக்காக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X