கிணற்றில் சேரும் கழிவு: நிலத்தடி நீர் பாதிக்குது

Added : செப் 25, 2021
Share
Advertisement
அன்னுார்:கரியாக்கவுண்டனுாரில் பாழுங்கிணற்றில் கழிவுநீர் இறங்குவதால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுகிறது.வடக்கலுார் ஊராட்சி, கரியாக்கவுண்டனுாரில் உள்ள துவக்கப் பள்ளியில், 70 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி அருகே புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், கழிவுநீர் வடிகாலில் பாதிப்பு ஏற்பட்டு, பள்ளி முன்பு கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

அன்னுார்:கரியாக்கவுண்டனுாரில் பாழுங்கிணற்றில் கழிவுநீர் இறங்குவதால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுகிறது.வடக்கலுார் ஊராட்சி, கரியாக்கவுண்டனுாரில் உள்ள துவக்கப் பள்ளியில், 70 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி அருகே புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், கழிவுநீர் வடிகாலில் பாதிப்பு ஏற்பட்டு, பள்ளி முன்பு கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அங்கே நிரம்பி அருகிலுள்ள பாழும் கிணற்றில் அந்த கழிவுநீர் சேகரமாவதால், அப்பகுதியில் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.கரியாக்கவுண்டனுார் மக்கள் கூறுகையில், 'வடக்கலூர் ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பள்ளி முன்பு கழிவுநீர் தேங்கி இருப்பதை தடுத்து, கிணற்றில் கழிவுநீர்சேகரமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு தரப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X