அரசியல் செய்தி

தமிழ்நாடு

இரட்டிப்பாகும் வருமானம் வனக் கல்லுாரி முதல்வர் பேச்சு

Added : செப் 25, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:''வேளாண் காடுகள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறது,'' என, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பார்த்திபன் பேசினார்.மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பல்பயன் வேளாண் காடுகள் மற்றும் வேளாண் காடுகள் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் என்ற தலைப்பில், திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்கின்றன. தொழிற்சாலை

மேட்டுப்பாளையம்:''வேளாண் காடுகள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறது,'' என, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பார்த்திபன் பேசினார்.மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பல்பயன் வேளாண் காடுகள் மற்றும் வேளாண் காடுகள் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் என்ற தலைப்பில், திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்கின்றன. தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் கூட்டமைப்பு, தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், தமிழ்நாடு வேளாண் துறையின் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிலையம் இணைந்து, தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்தி வருகிறது.வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பார்த்திபன் பேசுகையில், ''வேளாண் காடுகள் விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரமாக திகழ்கிறது. சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், விவசாய நிலங்களின் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கும் வேளாண் காடுகள் உகந்ததாகும்,'' என்றார்.வனக்கல்லுாரி ஆராய்ச்சி நிலைய வேளாண் காடுகள் துறை தலைவர் சேகர், மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிறுவனத்தின் வேளாண் அலுவலர் ஜாக்கிரா கானம், பேராசிரியர் உமேஷ் கண்ணா ஆகியோர் பேசினர். 18 மாவட்டங்களில் இருந்து, 32 வனச்சரக அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X