பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டம் கண்ட மரங்கள் அகற்றம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 'மே பிளவர்' மரங்கள் அகற்றப்பட்டன.பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், டி.எஸ்.பி., அலுவலகம், டி.எஸ்.பி., குடியிருப்பு மற்றும் எஸ்.ஐ.,க்கள், போலீசார் குடியிருப்புகள் தனித்தனியாக உள்ளன. வளாகத்தில் வேப்பமரம், மே பிளவர், கொன்றை உட்பட மரங்கள் உள்ளன. இதில், மே பிளவர் மரங்கள் சிலவற்றை
 ஆட்டம் கண்ட  மரங்கள் அகற்றம்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 'மே பிளவர்' மரங்கள் அகற்றப்பட்டன.பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், டி.எஸ்.பி., அலுவலகம், டி.எஸ்.பி., குடியிருப்பு மற்றும் எஸ்.ஐ.,க்கள், போலீசார் குடியிருப்புகள் தனித்தனியாக உள்ளன. வளாகத்தில் வேப்பமரம், மே பிளவர், கொன்றை உட்பட மரங்கள் உள்ளன. இதில், மே பிளவர் மரங்கள் சிலவற்றை அகற்றும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.போலீசார் கூறுகையில், 'வளாகத்திலுள்ள 'மே பிளவர்' மரங்களில், சில மரங்கள் காய்ந்து, கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில், எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற நிலையில் இருந்தது.மரங்களுக்கு கீழ் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால், மரம் விழுந்து விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதை தவிர்க்க, காய்ந்த மே பிளவர் மரங்கள் அகற்றப்பட்டன. இதற்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X