மாவட்ட கவுன்சிலர் தேர்தல்: போட்டியில் பா.ஜ., விலகல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கவுன்சிலர் தேர்தல்: போட்டியில் பா.ஜ., விலகல்

Added : செப் 25, 2021
Share
அன்னுார்:மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பா.ஜ., விலகியுள்ளது.கோவை மாவட்ட ஊராட்சி மூன்றாவது வார்டில், மாவட்ட கவுன்சிலர் தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்கு, பா.ஜ., அமைப்பு சாரா அணியின் மாவட்ட செயலாளர் உமாதேவி, பட்டியலின அணி மாவட்ட தலைவர் கவுதமன், ஒன்றிய துணைத்தலைவர் ராகவன் ஆகிய மூவர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.பா.ஜ., சார்பில், இந்த வார்டில்

அன்னுார்:மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பா.ஜ., விலகியுள்ளது.கோவை மாவட்ட ஊராட்சி மூன்றாவது வார்டில், மாவட்ட கவுன்சிலர் தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்கு, பா.ஜ., அமைப்பு சாரா அணியின் மாவட்ட செயலாளர் உமாதேவி, பட்டியலின அணி மாவட்ட தலைவர் கவுதமன், ஒன்றிய துணைத்தலைவர் ராகவன் ஆகிய மூவர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.பா.ஜ., சார்பில், இந்த வார்டில் போட்டியிட மாநில தலைமையிடம் அனுமதி கோரினர். மாவட்ட தலைமையும் பரிந்துரைத்து அனுப்பியது. இந்நிலையில், போட்டியிலிருந்து பா.ஜ., விலகியுள்ளது.பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளருக்கு பிரசாரம் செய்ய கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. எனவே, பா.ஜ., சார்பில், வேட்புமனு தாக்கல் செய்த மூவரும் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ., கருப்புசாமியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளோம்' என தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X