பொது செய்தி

தமிழ்நாடு

கிராம சபை கூட்டத்தில் 'அனல்' பறக்கப் போகுது! கேள்விகள் கேட்க தயாராகும் மக்கள்

Added : செப் 25, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்;வரும் அக்., 2ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபை கூட்டங்களில், அடிப்படை வசதிகள் செய்து தருவதில் நிலவும் தேக்கநிலை உள்ளிட்டவை குறித்து, சரமாரி கேள்விகள் எழுப்ப, பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகம் முழுவதும் ஜன., 26, மே 1, ஆக.,15, அக்., 2 ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டம் நடப்பது வழக்கம். கடந்தாண்டு ஜன., 26ல் மட்டும்

பெ.நா.பாளையம்;வரும் அக்., 2ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபை கூட்டங்களில், அடிப்படை வசதிகள் செய்து தருவதில் நிலவும் தேக்கநிலை உள்ளிட்டவை குறித்து, சரமாரி கேள்விகள் எழுப்ப, பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகம் முழுவதும் ஜன., 26, மே 1, ஆக.,15, அக்., 2 ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டம் நடப்பது வழக்கம். கடந்தாண்டு ஜன., 26ல் மட்டும் கிராமசபை கூட்டம் நடந்தது. பின், தொற்று பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் நடக்கவில்லை. வரும், 2ம் தேதி நடக்கும் கிராம சபை கூட்டங்களில் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பொதுமக்கள் பங்கேற்கலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும், 9 மாவட்டங்களை தவிர மற்ற, 28 மாவட்டங்களில் கிராமசபை கூட்டம் நடக்கும். திறந்தவெளியில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். அப்பகுதி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் அனைவரின் உடல் வெப்பநிலையை அளவிட வேண்டும்.யாருக்கேனும் அதிக வெப்பநிலை இருப்பது தெரியவந்தால், அவர்களை அனுமதிக்கக்கூடாது.மேலும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது. சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல் அறிகுறிகள், கோவிட்டால் பாதித்து தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்களை கூட்டத்தில் அனுமதிக்கக் கூடாது. கூட்டம் காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணிவரை நடத்தப்பட வேண்டும். நேரத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்து, கிராம சபையினர் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பெரியநாயக்கன்பாளையம் வட்டார ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது:கிராம ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்றபின், இதுவரை ஒரே ஒரு கிராமசபை கூட்டம் மட்டுமே நடந்துள்ளது. கிராம ஊராட்சியின் நிர்வாகம் குறித்து யாருக்கும் தெரியவில்லை.பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில், பல இடங்களில் பணம் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளது. கழிப்பிடம், குடிநீர் வினியோகம், சுகாதார நடவடிக்கைகள் உட்பட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து பல முறை உள்ளூரில் உள்ள கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் வாயிலாக கோரிக்கை விடுத்தும், பணிகள் எதுவும் நடக்கவில்லை.கிராமசபை கூட்டம், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் களமாக இருக்க வேண்டும். அதை விடுத்து, உபயோகம் இல்லாததாக மாறக்கூடாது. எனவே, இக்கிராம சபை கூட்டத்தில், கோவிட் காலத்தில் பிளீச்சிங் பவுடர் தெளித்தல், மருந்து அடித்தல் உட்பட கோவிட் தொற்றுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்தும், அதில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவாக பேச உள்ளோம்.ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகளை கவனமாக பார்த்து கேள்விகள் எழுப்புவோம்.இவ்வாறு, அவர்கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X