அரசியல் செய்தி

தமிழ்நாடு

தரமான தார் சாலை: மா.கம்யூ., தீர்மானம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே பீடர் ரோட்டில், தரமான தார் சாலை அமைக்க வேண்டும் என, மா.கம்யூ., கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.பெரியநாயக்கன்பாளையத்தில் மா.கம்யூ., கட்சியின், பத்தாவது கிளையின் மாநாடுநடந்தது. ரயில்வே பீடர் ரோட்டில் புதிதாக தார் சாலை போடும் பணி நடந்து வருகிறது. இது அரசு வழிமுறைகளின்படி தோண்டி முழுமையாக அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும், பல

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே பீடர் ரோட்டில், தரமான தார் சாலை அமைக்க வேண்டும் என, மா.கம்யூ., கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.பெரியநாயக்கன்பாளையத்தில் மா.கம்யூ., கட்சியின், பத்தாவது கிளையின் மாநாடுநடந்தது. ரயில்வே பீடர் ரோட்டில் புதிதாக தார் சாலை போடும் பணி நடந்து வருகிறது. இது அரசு வழிமுறைகளின்படி தோண்டி முழுமையாக அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும், பல இடங்களில் சாக்கடை கட்டப்படவில்லை; ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.குறைபாடுகளை அகற்றிவிட்டு, தரமான சாலை அமைக்க வேண்டும். பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, நாயக்கன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், நகை கடன் பெற்று உள்ளவர்களில், தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மட்டும், நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கிளை உறுப்பினர் குமாரசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலமூர்த்தி முன்னிலை வகித்தார். கிளையின் புதிய செயலாளராக சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கேசவமணி, ஒன்றிய குழு உறுப்பினர் சிவராஜ், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ராஜா, தலைவர் கோபாலகிருஷ்ணன், உதவிச் செயலாளர் ஹரிஹரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X