பொது செய்தி

தமிழ்நாடு

 விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கணும் :இதெல்லாம் ரொம்ப முக்கியம்!ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு 'அட்வைஸ்'

Added : செப் 25, 2021
Share
Advertisement
அன்னுார்;'ஓட்டுச்சாவடி அலுவலர்கள், கண்டிப்பாக அந்த மையங்களில் தான் தங்க வேண்டும்; வாக்காளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பிரச்னை ஏற்படாதபடி பதிலளிக்க வேண்டும்' என்பன உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல், மாவட்ட கவுன்சிலர் தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. வார்டில், 59 ஆயிரத்து, 201 வாக்காளர்கள் உள்ளனர். 100 ஓட்டுச்சாவடிகள்
  விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கணும் :இதெல்லாம் ரொம்ப முக்கியம்!ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு 'அட்வைஸ்'

அன்னுார்;'ஓட்டுச்சாவடி அலுவலர்கள், கண்டிப்பாக அந்த மையங்களில் தான் தங்க வேண்டும்; வாக்காளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பிரச்னை ஏற்படாதபடி பதிலளிக்க வேண்டும்' என்பன உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல், மாவட்ட கவுன்சிலர் தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. வார்டில், 59 ஆயிரத்து, 201 வாக்காளர்கள் உள்ளனர். 100 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு ஓட்டுச்சாவடிக்கு, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் இருவர், உதவியாளர்கள் இருவர் என, 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஓட்டுச்சாவடி அலுவலர்களாக, அன்னுார் மற்றும் காரமடை ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள், 200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பு, நேற்று அன்னுாரில் நடந்தது.மாவட்ட மகளிர் திட்ட அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ரமேஷ்குமார் பேசுகையில், ''உங்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டை முழுமையாக படிக்க வேண்டும். தேர்தலுக்கு முந்தைய நாள் மதியம் 3:00 மணிக்குள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு சென்றுவிட வேண்டும்.
மூன்றாவது பயிற்சி வகுப்பு, 8ம் தேதி காலையில் நடைபெறும். அந்த பயிற்சி வகுப்பில் உங்களுக்கான ஓட்டுச்சாவடி தெரிவிக்கப்படும்,'' என்றார். காலை 6:00 மணிக்கு...உதவி தேர்தல் அலுவலர் முத்துக்குமாரசாமி பேசியதாவது:உங்களுடைய கை கடிகாரத்தில் சரியான நேரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். மண்டல அலுவலர்கள் உங்களிடம் தேர்தல் பொருட்களை ஒப்படைக்கும் போது ஓட்டுச்சீட்டு, முத்திரை உட்பட அனைத்து பொருட்களும் சரியாக இருக்கின்றனவா என பார்த்துக் கொள்ள வேண்டும். ஓட்டுச்சாவடியில் ஓட்டுப் பெட்டி எங்கு வைப்பது, முகவர்களை எங்கு அமர வைப்பது என திட்டமிட்டு அதற்கு ஏற்ப மேஜை, நாற்காலிகள், அமைக்க வேண்டும்.ஓட்டு போட வருவோரை முகவர்கள் சரியாக பார்க்கும்படி இருக்கை அமைக்க வேண்டும். தேர்தலுக்கு முந்தைய நாள் கண்டிப்பாக அந்த ஓட்டுச்சாவடி மையத்திலேயே தங்க வேண்டும். அந்தப் பகுதியில் உறவினர் அல்லது தெரிந்தவர்கள் வீட்டில் தங்கிவிட்டு, தேர்தல் நாளன்று காலையில் வருவது கூடாது. தேர்தல் நாளன்று காலை 6:00 மணிக்கு பணியை துவக்கி விட வேண்டும். சரியாக 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நடக்கும் படி ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.அனைவருக்கும் வாய்ப்புவாக்காளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பிரச்னை ஏற்படாதபடி பதிலளிக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் அல்லது அணியும் உடையில் கட்சி சின்னம் அல்லது சுயேச்சை சின்னம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஓட்டுச்சாவடியில் இருந்து, 100 மீ., தொலைவுக்குள் தலைவர்கள் படம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தேவையில்லாமல் வெளி நபர்களுக்கு மொபைல் போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும். தேர்தல் அலுவலர்கள் வாக்களிக்க விரும்பினால், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான படிவங்கள் தேர்தல் பயிற்சி வகுப்பில் தரப்படும். ஓட்டுப்பதிவு முடியும் நேரம் வரை மையத்தின் வளாகத்தில் உள்ள அனைவருக்கும் வாக்களிக்க வாய்ப்பு தரவேண்டும். ஆனால் நேரம் முடியும்போது, நுழைவு வாசலை மூடிவிட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நவமணி, அசோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துராஜ், ராஜா செல்வம் ஆகியோர் பேசினர். தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட, 200 பேரில் 95 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X