பொது செய்தி

தமிழ்நாடு

வட்டார வாரியாக முகாம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சூலுார்:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான 'அலிம்கோ' வாயிலாக, கோவை மாவட்டத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதற்கான சிறப்பு முகாம்கள் வட்டார அளவில் நடக்க உள்ளது.வரும், 27ம் தேதி எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், எஸ்.எஸ்.குளம் துவக்கப்பள்ளி, 28ல், சூலுார் ஒன்றியம், சூலுார் எஸ்.எல்.வி., நகர் நடுநிலைப்பள்ளி, 29ல், மதுக்கரை ஒன்றியம்,

சூலுார்:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான 'அலிம்கோ' வாயிலாக, கோவை மாவட்டத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதற்கான சிறப்பு முகாம்கள் வட்டார அளவில் நடக்க உள்ளது.வரும், 27ம் தேதி எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், எஸ்.எஸ்.குளம் துவக்கப்பள்ளி, 28ல், சூலுார் ஒன்றியம், சூலுார் எஸ்.எல்.வி., நகர் நடுநிலைப்பள்ளி, 29ல், மதுக்கரை ஒன்றியம், மதுக்கரை மார்க்கெட் துவக்கப் பள்ளி, 30ல் தொண்டாமுத்துார் துவக்கப்பள்ளி, அக்.,1ல், கிணத்துக்கடவு துவக்கப்பள்ளி, அக்.,4ல், சுல்தான்பேட்டை துவக்கப்பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, செயற்கை கால், கை, ஊன்று கோல், காதொலிகருவிகள், பார்வையற்றோர்களுக்கான மொபைல் போன் போன்றவற்றை பெற தகுதியுடையவர்கள், முகாம்களில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் அளவீடுகளும் எடுக்கப்படும்.பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகள், தங்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் நகல், ஆதார் அட்டை மற்றும் நகல், ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள்நான்கு ஆகியவற்றுடன் வரவேண்டும் என, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறைஅறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X