பொது செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு கலை நிகழ்ச்சியில் விழிப்புணர்வு

Added : செப் 25, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் 'கற்போம், எழுதுவோம்' திட்டம் சார்ந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் நடந்தது. இத்திட்டத்தில், அரசு
 பெண் குழந்தைகள் பாதுகாப்பு  கலை நிகழ்ச்சியில் விழிப்புணர்வு

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் 'கற்போம், எழுதுவோம்' திட்டம் சார்ந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் நடந்தது. இத்திட்டத்தில், அரசு பள்ளிகளையொட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட, எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு, எழுத்தறிவித்தல் வகுப்புகள் நடந்து வருகின்றன.இதுகுறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்டம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரியநாயக்கன்பாளையம் வட்டார அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.பள்ளியின் தலைமை ஆசிரியை (பொறுப்பு) பாக்கியவதி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். போத்தனுாரை சேர்ந்த ஆனந்தராஜ், ராணி தலைமையிலான அபிலயா கலைக்குழுவினர், திட்டம் குறித்தும், கோவிட் காலத்தில் பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள், பெண்களுக்கான பாதுகாப்பு சமூக பிரச்னைகள், முதியோருக்கு உதவுதல், ஒயிலாட்டம், நாடகம், கிராமிய பாடல்கள் வாயிலாக நடனமாடி விளக்கினர். கூறினர்.கணுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி, கணுவாய் பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை கல்பனா, வட்டார ஆசிரியர் பயிற்றுநர் அம்சவேணி, உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார், சிறப்பு கல்விஆசிரியர் ஆர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X