பொது செய்தி

தமிழ்நாடு

பருவ மழை முன்னெச்சரிக்கை: தயார் நிலையில் இருக்க அறிவுரை

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை;சென்னை, தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளத் தேவையான, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில், முதல்வர் பேசியதாவது:பேரிடர் காலங்களில், அரசு துறைகள் தனித்தனியாக இயங்காமல், ஒன்றாக இணைந்து இயங்க வேண்டியது மிகவும் அவசியம்.புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்படும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க,

சென்னை;சென்னை, தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளத் தேவையான, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில், முதல்வர் பேசியதாவது:பேரிடர் காலங்களில், அரசு துறைகள் தனித்தனியாக இயங்காமல், ஒன்றாக இணைந்து இயங்க வேண்டியது மிகவும் அவசியம்.புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்படும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். குடிநீர், தரமான உணவு, குழந்தைகளுக்கு தேவையான, பால், ரொட்டி போன்றவற்றை வழங்க வேண்டும்.அனைத்து ரேஷன் கடைகளிலும், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவு வைத்திருப்பதை, இப்போதே உறுதி செய்ய வேண்டும்.தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய் பரவலை தடுக்கவும் வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாம்பு கடிக்கான மாற்று மருந்துகள், ஆக்சிஜன் உருளைகள், போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு நடைமுறைகள், தவறாது பின்பற்றப்படுவதும், உறுதி செய்யப்பட வேண்டும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.கூட்டத்தில், அமைச்சர்கள் வேலு, சாத்துார் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, சுப்பிரமணியன், தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X