முட்டை நுகர்வு: 30 சதவீதம் சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முட்டை நுகர்வு: 30 சதவீதம் சரிவு

Added : செப் 25, 2021
Share
நாமக்கல்:புரட்டாசி விரதம் காரணமாக, தமிழகத்தில், 30 சதவீதம் முட்டை நுகர்வு சரிந்துள்ளது.தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:தமிழகத்தில் புரட்டாசி விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். அந்த நேரத்தில் முட்டை நுகர்வு சரிந்து, தமிழக முட்டைகள் வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.அதையடுத்து, அந்த மண்டலத்தில்,

நாமக்கல்:புரட்டாசி விரதம் காரணமாக, தமிழகத்தில், 30 சதவீதம் முட்டை நுகர்வு சரிந்துள்ளது.தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:தமிழகத்தில் புரட்டாசி விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். அந்த நேரத்தில் முட்டை நுகர்வு சரிந்து, தமிழக முட்டைகள் வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.அதையடுத்து, அந்த மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலையை குறைத்து வருகின்றனர். நாமக்கல் மண்டலத்தில், 'நெக்' நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, 50 காசு குறைத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அதன் காரணமாக, பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.மேலும், தமிழக மக்கள் புரட்டாசி விரதம் கடைப்பிடிப்பதால், முட்டை நுகர்வு, 30 சதவீதம் குறைந்துள்ளது. வடமாநிலங்களில், கொள்முதல் விலை குறைப்பதாலும், குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதாலும், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை, 20 காசு குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X