சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனத்துறை பணியாளர் வேலை நிறுத்தம்; அலுவலர் கைதுக்கு எதிராக போராட்டம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;வால்பாறை வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம், வால்பாறை சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் கடந்த, 22ம் தேதி வனத்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் மூன்று பேர் தங்கினர். அங்கு, அவர்களுக்கும், வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயசந்திரனுக்கும் இடையே வாக்குவாதம்
 வனத்துறை பணியாளர் வேலை நிறுத்தம்; அலுவலர் கைதுக்கு எதிராக போராட்டம்

பொள்ளாச்சி;வால்பாறை வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம், வால்பாறை சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் கடந்த, 22ம் தேதி வனத்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் மூன்று பேர் தங்கினர். அங்கு, அவர்களுக்கும், வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயசந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.வனச்சரக அலுவலர் மதுபோதையில் இருந்ததாகவும், தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வால்பாறை மாஜிஸ்திரேட் கோர்ட் எழுத்தர் மனோகரன் வால்பாறை போலீசில் புகார் கொடுத்தார்.ஜெயச்சந்திரனை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து, நேற்று பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில், வனத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.வனத்துறை அலுவலர்கள் சங்க மாநிலத்தலைவர் சிவபிரகாசம் பேசியதாவது:வனத்துறை ஆய்வு மாளிகையில் தங்கிய, மூன்று பேர் வனத்தினுள் அனுமதியின்றி சென்றுள்ளனர். யானைகள் நடமாட்டம் இருந்ததால் பாதுகாப்பு கருதி, வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் அவர்களை அறைக்கு திரும்புமாறு கூறியுள்ளார். சம்பவ இடத்திலேயே இல்லாத, மாஜிஸ்திரேட் கோர்ட் எழுத்தர் கொடுத்த புகாரின் பேரில், உரிய விசாரணை நடத்தாமல் வனச்சரக அலுவலரை போலீசார் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.தனிக்குழு அமைத்து நீதி விசாரணை செய்யும் வரை, ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வனக்கோட்ட பணியாளர்கள் ஒருங்கிணைந்து, காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X