பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் புதிய நகராட்சிகளில் சேர கிராம ஊராட்சிகளில் எதிர்ப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவையில் அரசால் அறிவிக்கப்பட்ட புதிய நான்கு நகராட்சிகளுடன் இணைப்பதற்கு, அருகிலுள்ள கிராம ஊராட்சிகளில் எதிர்ப்பு கிளம்பியதால், பேரூராட்சிகளை அப்படியே நகராட்சியாக தரம் உயர்த்துமாறு அரசுக்கு கோவை கலெக்டர் பரிந்துரைத்துள்ளார்.கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலுார் மற்றும் மதுக்கரை ஆகிய நான்கு பேரூராட்சிகளும் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாக துறை
 கோவையில் புதிய நகராட்சிகளில் சேர கிராம ஊராட்சிகளில் எதிர்ப்பு

கோவையில் அரசால் அறிவிக்கப்பட்ட புதிய நான்கு நகராட்சிகளுடன் இணைப்பதற்கு, அருகிலுள்ள கிராம ஊராட்சிகளில் எதிர்ப்பு கிளம்பியதால், பேரூராட்சிகளை அப்படியே நகராட்சியாக தரம் உயர்த்துமாறு அரசுக்கு கோவை கலெக்டர் பரிந்துரைத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலுார் மற்றும் மதுக்கரை ஆகிய நான்கு பேரூராட்சிகளும் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாக துறை அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான முன் மொழிவை அனுப்புமாறு, கோவை கலெக்டருக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் கோரியிருந்தார்.இந்த நான்கு பேரூராட்சிகளிலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை இருப்பதால், நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு இசைவு தெரிவித்து அந்தந்த பேரூராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இவற்றில் 19.82 சதுர கி.மீ., பரப்பளவுள்ள காரமடையின் மக்கள்தொகை 43 ஆயிரத்து 521, ஆண்டு வருவாய் 14.37 கோடி ரூபாய்; 27 சதுர கி.மீ., பரப்பளவுள்ள கருமத்தம்பட்டியின் மக்கள் தொகை 45 ஆயிரத்து 286, ஆண்டு வருவாய் 15 கோடியே 8 லட்ச ரூபாய்.30 சதுர கி.மீ., பரப்பளவுள்ள கூடலுாரின் மக்கள் தொகை 65 ஆயிரத்து 753, ஆண்டு வருவாய் 14 கோடியே ஒரு லட்ச ரூபாய்; 21.47 சதுர கி.மீ., பரப்பளவுள்ள மதுக்கரையின் மக்கள் தொகை 34 ஆயிரத்து 401, ஆண்டு வருவாய் 10 கோடியே 57 லட்ச ரூபாய் என்று விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலெக்டர் தலைமையில் நடந்த இரண்டு கருத்துக் கேட்பு கூட்டங்களில், புதிய நகராட்சிகளுடன் இணைவதற்கு கிராம ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு ஆகியவற்றுக்கான உதவித்தொகை ஆகியவை கிராம ஊராட்சிகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால், இவற்றை விட்டுத்தர மக்கள் பிரதிநிதிகள் பலரும் தயாராக இல்லை.தற்போதுள்ள பேரூராட்சிகளில் நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான மக்கள் தொகை இருப்பதால், அதே பரப்பளவில் அவற்றை நகராட்சியாக தரம் உயர்த்தலாம் என்று பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் முன்மொழிவுகள் அளித்துள்ளனர். அவற்றை அப்படியே தனது பரிந்துரையாக கோவை கலெக்டர் சமீரன் அரசுக்கு அனுப்பியுள்ளார். -நமது சிறப்பு நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X