ஐ.ஏ.எஸ்., தேர்வில் கோவை மாணவர் 33வது இடத்தில் தேர்ச்சி : மனிதநேய மையத்தில் படித்தவர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ்., தேர்வில் கோவை மாணவர் 33வது இடத்தில் தேர்ச்சி : மனிதநேய மையத்தில் படித்தவர்

Added : செப் 25, 2021
Share
சென்னை;ஐ.ஏ.எஸ்., தேர்வில், கோவையைச்சேர்ந்த மாணவர் நாராயண சர்மா 33வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். மனிதநேய அறக்கட்டளையில் படித்த, 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மனிதநேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி அறிக்கை:கடந்த, 2020ம் ஆண்டு, 796 குடிமைப் பணிகள் காலியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த ஆண்டு மே மாதம் நடக்கவிருந்த, முதல்நிலைத் தேர்வு, கொரோனா அச்சுறுத்தல்
 ஐ.ஏ.எஸ்., தேர்வில் கோவை மாணவர் 33வது இடத்தில் தேர்ச்சி : மனிதநேய மையத்தில் படித்தவர்

சென்னை;ஐ.ஏ.எஸ்., தேர்வில், கோவையைச்சேர்ந்த மாணவர் நாராயண சர்மா 33வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். மனிதநேய அறக்கட்டளையில் படித்த, 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மனிதநேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி அறிக்கை:கடந்த, 2020ம் ஆண்டு, 796 குடிமைப் பணிகள் காலியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த ஆண்டு மே மாதம் நடக்கவிருந்த, முதல்நிலைத் தேர்வு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 2020 அக்., 4ல் நடந்தது. அதேமாதம், 23ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.கடந்த ஜனவரி மாதம் நடந்த, முதன்மைத் தேர்வு முடிவுகள், மார்ச் 23ல் வெளியிடப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, நேர்முகத் தேர்வு ஆக., 2 முதல் செப்., 23 வரை நடந்தது.நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின.மனிதநேய மையம் வழியாக, நேர்முகத் தேர்வில் பங்கேற்ற, மாணவ - மாணவியரில், எட்டு மாணவியர், பத்து மாணவர்கள் என, மொத்தம் 18 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.கோவையை சேர்ந்த நாராயண சர்மா, 33வதுஇடம்; தென்காசியை சேர்ந்த சண்முகவள்ளி, 108வது இடம்; கோவையை சேர்ந்த சுவாதிஸ்ரீ, 126வது இடம்; சென்னையை சேர்ந்த கேத்தரின் சரண்யா, 157வது இடம் பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.வேறு இடங்களில் படித்தவர்களில், மதுரை டாக்டர் முகமது ரிஸ்வின், 589 வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X