சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் கொலை: மனைவி கைது

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஊட்டி:ஊட்டியில் கணவரை கொலை செய்த மனைவி மற்றும் இருவர் கைது செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி கிரீன் பில்டை சேர்ந்தவர் ஜான்பால்,40. இவரது மனைவி ரோஸ்லின் மேரி,33. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, ரோஸ்லின் மேரி ஊட்டி புதுமந்து பகுதியில், தனது தாயார் நிஷா வீட்டுக்கு சென்றுள்ளார்.நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் ஜான்பால் அங்கு சென்றார். கணவன், மனைவி இடையே வாக்குவாதம்

ஊட்டி:ஊட்டியில் கணவரை கொலை செய்த மனைவி மற்றும் இருவர் கைது செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி கிரீன் பில்டை சேர்ந்தவர் ஜான்பால்,40. இவரது மனைவி ரோஸ்லின் மேரி,33. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, ரோஸ்லின் மேரி ஊட்டி புதுமந்து பகுதியில், தனது தாயார் நிஷா வீட்டுக்கு சென்றுள்ளார்.நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் ஜான்பால் அங்கு சென்றார். கணவன், மனைவி இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ரோஸ்லின்மேரி, ஜான்பாலை கட்டையால் தாக்கியுள்ளார். பலத்த காயம் அடைந்த ஜான்பால் ஊட்டி அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். ஊட்டி பி1 போலீசார் விசாரித்து, ரோஸ்லின்மேரி, தாயார் நிஷா, 55, அக்கா கிளாரா, 35, ஆகியோரை கைது செய்தனர். கிளாராவின் கணவர் சுரேஷ் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X