புலி தாக்கி தொழிலாளி பலி : சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
கூடலுார்;கூடலுார் அருகே தொழிலாளியை தாக்கிக் கொன்ற புலியை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையை சேர்ந்தவர் சந்திரன்,51; தனியார் எஸ்டேட் தொழிலாளி. இவர் தேவன் எஸ்டேட் பகுதியில் நேற்று மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென புதரில் இருந்து பாய்ந்து வந்த புலி அவரை
 புலி தாக்கி தொழிலாளி பலி : சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

கூடலுார்;கூடலுார் அருகே தொழிலாளியை தாக்கிக் கொன்ற புலியை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையை சேர்ந்தவர் சந்திரன்,51; தனியார் எஸ்டேட் தொழிலாளி. இவர் தேவன் எஸ்டேட் பகுதியில் நேற்று மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென புதரில் இருந்து பாய்ந்து வந்த புலி அவரை தாக்கியது. அதில் படுகாயம் அடைந்த அவர், எஸ்டேட் சாலையில் கதறியவாறு உயிருக்கு போராடினார்.ஜீப்பில் அவ்வழியாக வந்த வன ஊழியர்கள், அவரை மீட்டு கூடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.'புலியை பிடிக்க வேண்டும்; இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என, வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தேவர்சோலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகம், கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கூடலுார் வன அலுவலர் சச்சின் துக்காராம், ஆர்.டி.ஓ., சரவணகண்ணன், நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., மோகன்நிவாஸ் மக்களிடம் பேச்சு நடத்தினர். இரவு, 7:00 மணிக்கு பின்பும் பேச்சு தொடர்ந்தது.எஸ்டேட் பகுதியில் கூண்டு வைத்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X