1323க்கு ஒரு போன் போடுங்க சீட்டுக்கே வரும் சாப்பாடு!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'1323'க்கு ஒரு போன் போடுங்க சீட்டுக்கே வரும் சாப்பாடு!

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (8)
Share
ரயில் பயணிகள், 1323 என்ற பிரத்யேக அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டால், இருக்கையை தேடி உணவு வரும் என்கின்றனர், ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள்.இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.,) www.irctc.co.in என்ற இணையதளத்தில் தினமும் லட்சக்கணக்கானோர், 'டிக்கெட்' முன்பதிவு செய்து ரயில்களில் பயணிக்கின்றனர். பயணிகள் வசதிக்காக பெட்ஷீட், மெத்தை, உணவு உள்ளிட்ட வசதிகளை
IRCTC, Order Food, Travelling, Indian Railways, Trains

ரயில் பயணிகள், 1323 என்ற பிரத்யேக அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டால், இருக்கையை தேடி உணவு வரும் என்கின்றனர், ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள்.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.,) www.irctc.co.in என்ற இணையதளத்தில் தினமும் லட்சக்கணக்கானோர், 'டிக்கெட்' முன்பதிவு செய்து ரயில்களில் பயணிக்கின்றனர். பயணிகள் வசதிக்காக பெட்ஷீட், மெத்தை, உணவு உள்ளிட்ட வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி., படிப்படியாக துவங்கியது. இவ்வசதிகளை மொபைல் போன் செயலி, இலவச டோல் எண் வாயிலாக பயணிகள் பெற்று வருகின்றனர். தற்போது, ரயில் பயணத்தின்போது இருக்கை தேடி உணவு பெறுவதற்காக, 1323 என்ற இலவச அழைப்பு எண்ணை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம் செய்துள்ளது.


latest tamil news


ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறுகையில், 'பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம், மொபைல் போன் செயலி, 139 அழைப்பு எண் வாயிலாக முன்பதிவு செய்து, இதுவரை உணவு பெற்று வந்தனர். தற்போது, 1323 என்ற இலவச அழைப்பு எண், இருக்கை தேடி உணவு பெறுவதற்கு பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, சேலம் ஸ்டேஷன்களில் பயணிகள் இவ்வசதி வாயிலாக உணவு பெறலாம்' என்றனர்.
-நமது நிருபர்-

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X