விசைத்தறியாளர் கூலி: பேச்சு ஒத்திவைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறியாளர் கூலி: பேச்சு ஒத்திவைப்பு

Added : செப் 25, 2021
Share
கோவை:கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 2.5 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. 35 ஆயிரம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்கள்உள்ளனர்.கடந்த 2014ம் ஆண்டு முதல், கூலி உயர்வு ஒப்பந்தம் சரிவர கடைபிடிக்கப்படாமல் போனது. தற்போது உரிய கூலி உயர்வு வழங்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் அரசை வலியுறுத்திவருகின்றனர்.கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு

கோவை:கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 2.5 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. 35 ஆயிரம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்கள்உள்ளனர்.கடந்த 2014ம் ஆண்டு முதல், கூலி உயர்வு ஒப்பந்தம் சரிவர கடைபிடிக்கப்படாமல் போனது. தற்போது உரிய கூலி உயர்வு வழங்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் அரசை வலியுறுத்திவருகின்றனர்.கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு நேற்று மாலை நடந்தது. இதில், கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் சோமனுார் தலைவர் பழனிசாமி, பல்லடம் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சோமனுார் ஜவுளி உற்பத்தியாளர்கள் மட்டும் பங்கேற்றனர். திருப்பூர், அவிநாசி, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை முடிவுகள் எதுவும் எட்டப்படாமல், அக்., 22க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X