நிதி உதவி வழங்கி இளம் தளிர்களின் தற்கொலையை ஊக்குவிக்க வேண்டாம் என வலியுறுத்துவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லையே...

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
'நீட்' தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சவுந்தர்யா, தீக்காயம் அடைந்துள்ள அனுசுயா ஆகியோரின் பெற்றோருக்கு தலா, 72 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வழங்கினேன்.- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்'நிதியுதவி வழங்கி, இளம் தளிர்களின் தற்கொலைகளை ஊக்குவிக்க வேண்டாம் என பல தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்படுவதை நீங்கள் கண்டுகொள்ளவில்லையே...' என, கண்டிக்கத்
நிதி உதவி வழங்கி இளம் தளிர்களின் தற்கொலையை ஊக்குவிக்க வேண்டாம் என வலியுறுத்துவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லையே...

'நீட்' தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சவுந்தர்யா, தீக்காயம் அடைந்துள்ள அனுசுயா ஆகியோரின் பெற்றோருக்கு தலா, 72 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வழங்கினேன்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்


'நிதியுதவி வழங்கி, இளம் தளிர்களின் தற்கொலைகளை ஊக்குவிக்க வேண்டாம் என பல தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்படுவதை நீங்கள் கண்டுகொள்ளவில்லையே...' என, கண்டிக்கத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.



பிரிட்டன் செல்லும், இரண்டு 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போட்ட இந்தியர்களையும் அந்நாடு ஏற்பதில்லை என்ற புகார் வந்ததும், அந்த தடுப்பூசியே பிரிட்டனில் இருந்து வந்தது தானே என கூறினேன். அதற்குப் பிறகு தான், தடுப்பூசியில் பிரச்னையில்லை; நாம் வழங்கிய சான்றிதழில் தான் பிரச்னை என்பது தெரிந்தது.
- பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி


'சான்றிதழில் மோடி படம் இருப்பது, பிரிட்டனுக்கும் பிடிக்கவில்லை போலும்...' என, சொல்லத் துாண்டும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அறிக்கை.



'பி.எம்.கேர்ஸ்' என்ற பெயரில் மத்திய அரசு நிதி திரட்டியது. இப்போது அந்த நிதி, அரசு நிதியல்ல என நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மிகப் பெரிய மோசடி அல்லவா?
- மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்


'இதுபோலத் தான் முந்தைய காங்., ஆட்சியிலும் நடந்தது. அதன்படி தான், மத்திய அரசு செயல்பட்டுள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.



காமராஜரின் காலம் பள்ளி கல்வியின் பொற்காலம். கருணாநிதியின் காலம் மேல்நிலை கல்வியின் பொற்காலம். முதல்வர் ஸ்டாலின் காலம் தொழில் கல்வி, தொழில் நுட்ப கல்விகளின் பொற்காலம் என்று வரலாறு நிச்சயம் பதிவு செய்யும்!
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


latest tamil news




'நீட் குளறுபடிகள் நீடிக்கையில், நீங்களாக இப்படி சொல்லிக் கொள்ள வேண்டியது தான்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.



'நீட்' தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. நீட் தேர்வில் சமூக நீதி இல்லை என சொல்லும் தமிழக அரசு, எப்படி, அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டும், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குகிறது; இது நியாயம் தானா?
- புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி


இந்த குளறுபடிகளை தட்டிக் கேட்க, பா.ஜ.,வையும், உங்களையும் தவிர இங்கு வேறு ஆளில்லை...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை.



கூட்டுறவு வங்கிகளில் தங்க நகை கடன் தள்ளுபடியில் ஏராளமான தவறுகளும், முறைகேடுகளும் நடந்துள்ளன. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் நடைபெற்ற இத்தகைய முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்


''தமிழக அரசே ஏற்கனவே நடவடிக்கையை துவக்கி விட்டது. குற்றவாளிகள் நிச்சயம் சிக்குவர்...' என, சொல்லத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
26-செப்-202114:00:04 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் நடைபெற்ற இத்தகைய முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்....\\ ..... கண்டிப்பா நடத்தணும்.... அதிலே எத்தனை அதிமுக, திமுக, விசிக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் முறைகேடு செய்து பயனாளிகளாக இருக்கிறார்கள் அப்படின்னும் தெரிவிக்கணும்... ஏன்னா, கொள்ளையடிக்கறதிலே, எல்லா கட்சிகளும் கூட்டுக்களவாணிகள், 25 கோடி கம்யூனிஸ்ட்களையும் சேர்த்து ..
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
26-செப்-202113:56:10 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\முதல்வர் ஸ்டாலின் காலம் தொழில் கல்வி, தொழில் நுட்ப கல்விகளின் பொற்காலம் என்று வரலாறு நிச்சயம் பதிவு செய்யும்\\ ..ஏன் இதிலே மருத்துவக் கல்வியை சேக்கலை? அப்பறம், தொழில் கல்விலேயும், தொழில் நுட்பக் கல்விலேயும் பொற்காலம் என்று அழைக்கப்பட ஸ்டாலின் என்ன புரட்சி செஞ்சிருக்கார் செய்யப் போறார் ??
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
25-செப்-202115:30:13 IST Report Abuse
Vena Suna காமராஜர் ஆட்சி பாண்டவர் ஆட்சி. கருணாநிதி ஆட்சி கௌரவர்கள் ஆட்சி. ஸ்டாலின் ஆட்சி போப் ஆட்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X