மின்சார செலவை குறைக்கும் வழிகள்!

Added : செப் 25, 2021
Share
Advertisement
நம் வீடு தானே என தேவையில்லாத அறைகளில், தேவையில்லாத நேரங்களில் மின் விளக்குகளை எரிய விட்டால் மின்சார செலவு தான் அதிகரிக்கும். எப்போதும் தேவையில்லாத நேரங்களில் விளக்குகளை எரியவிடாமல் இருப்பதே நல்லது. குழாய் மின் விளக்குகள் மற்றும் பல்புகள் ஆகியவற்றிலும் இந்த சிக்கன நடவடிக்கை பொருந்தும். மின் விளக்குகளில் சேரும் துாசிகளை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். ஐ.எஸ்.ஐ.,

நம் வீடு தானே என தேவையில்லாத அறைகளில், தேவையில்லாத நேரங்களில் மின் விளக்குகளை எரிய விட்டால் மின்சார செலவு தான் அதிகரிக்கும். எப்போதும் தேவையில்லாத நேரங்களில் விளக்குகளை எரியவிடாமல் இருப்பதே நல்லது. குழாய் மின் விளக்குகள் மற்றும் பல்புகள் ஆகியவற்றிலும் இந்த சிக்கன நடவடிக்கை பொருந்தும்.

மின் விளக்குகளில் சேரும் துாசிகளை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். ஐ.எஸ்.ஐ., முத்திரையிட்ட மின் சாதனங்களையும், கருவிகளையுமே பயன்படுத்துங்கள். குழாய் விளக்குகளையும், பல்புகளையும் அதன் வெளிச்சம் தடைபடாத இடத்தில் பொருத்தினால் நல்ல வெளிச்சம் கிடைக்கும். முடிந்த வரை தற்போதைய எல்.இ.டி., விளக்குகள் பயன்படுத்தினால் மின்சாரம் சிக்கனமாக பயன்படுத்தலாம். இன்கான்டசென்ட் (ஒளி இழைகள் சூடாகி வெளிச்சம் தருகிற) விளக்குகளான குண்டு பல்புகளை விட 'காம்பாக்ட் புளூரசன்ட்' என்ற சி.எப்.எல்., பல்புகள் மூன்றில் ஒரு பங்கு குறைவாக மின் சக்தி எடுக்கும். வெளியிடும் வெளிச்சமும் குறைவதில்லை.

காம்பாக்ட் புளூரசன்ட் பல்புகள், இன்கான்டசென்ட் பல்புகள் அளிக்கும் வெளிச்சம் போலவே இதமாக இருக்கும். அதே சமயத்தில் 75 சதவீதம் குறைந்த மின்சாரத்தையே எடுக்கும். சி.எப்.எல். விலை கூடுதல் என்றாலும் பயனுள்ளது. அவை அளவில் சிறியவை, சிக்கனமானவை, அதிக வெளிச்சம், கூடுதல் வண்ணம் தரும். 23 வாட் சக்தியுள்ள காம்பாக்ட் புளூரசன்ட் பல்பை 90 அல்லது 100 வாட் சக்தியுள்ள இன்கான்டசென்ட் பல்பிற்கு பதிலாக பயன்படுத்தலாம்.ஒரு நாளைக்கு 4 மணிநேரங்களுக்கு மேல் எரியும் விளக்கு உள்ள இடங்களில் காம்பாக்ட் புளூரசன்ட் பல்பு பொருத்தலாம். 75 வாட் சக்தியுள்ள இரு பல்புகளுக்கு பதில் இரண்டு 15 வாட் புளூரசன்ட் பல்பு பயன்படுத்தினால் ஓர் ஆண்டிற்கு 18 கிலோ வாட் மணிநேர மின் சக்தியை மிச்சமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X