ஒப்பந்த கட்டுமான பணி முறைகளில் ஏற்படும் சிக்கல்கள் | Dinamalar

ஒப்பந்த கட்டுமான பணி முறைகளில் ஏற்படும் சிக்கல்கள்

Added : செப் 25, 2021
Share
வீடு உள்ளிட்ட கட்டுமானங்களை கட்டுவதற்கு சம்பந்தபட்ட மனை, இடத்தின் உரிமையாளர்களே பொருட்களை வாங்கி கொடுத்து 'லேபர் கான்ட்ராக்ட்' என்ற ஒப்பந்த பணி முறையில் கட்டுமான பணியாளர்களை நியமித்து கட்டடம் கட்டுகிறார்கள். இம்முறையில் சில நேரங்களில் பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகின்றன. லேபர் கான்ட்ராக்ட் கனவு வீட்டை பிடித்த வகையில் கட்டுவது சாதனையாக உள்ள இன்றைய சூழலில்

வீடு உள்ளிட்ட கட்டுமானங்களை கட்டுவதற்கு சம்பந்தபட்ட மனை, இடத்தின் உரிமையாளர்களே பொருட்களை வாங்கி கொடுத்து 'லேபர் கான்ட்ராக்ட்' என்ற ஒப்பந்த பணி முறையில் கட்டுமான பணியாளர்களை நியமித்து கட்டடம் கட்டுகிறார்கள். இம்முறையில் சில நேரங்களில் பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகின்றன.

லேபர் கான்ட்ராக்ட்

கனவு வீட்டை பிடித்த வகையில் கட்டுவது சாதனையாக உள்ள இன்றைய சூழலில் பலரும் வங்கி கடன் அல்லது அடமானம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கட்டட பணிகளுக்கான பணத்தை ஏற்பாடு செய்கிறார்கள். பொதுவாக அனுபவமுள்ள கட்டுமான நிறுவனம் அல்லது தொழில்நுட்ப அனுபவமுள்ள கட்டுமான பொறியாளர்களிடம் கட்டடம் அமைக்கும் பணியை ஒப்படைத்து, பணி முடிப்பது தான் பாதுகாப்பான முறையாகும். மொத்த பட்ஜெட் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை மிச்சமாக்கலாம் என்ற அடிப்படையில் 'லேபர் கான்ட்ராக்ட்' முறை தேர்ந்தெடுக்கிறார்கள்.

நான்கு 'எம்'கள் முக்கியம்

சிரமங்களுக்கு இடையில் வீடு, அடுக்குமாடி கட்டும் ஒருவர் விருப்பப்படி செயல்படுவது இயற்கை என தெரிவிக்கும் பொறியாளர்கள் கவனம் செலுத்தும் அடிப்படை விஷயங்கள், தொழில்நுட்பம் குறித்த தகவல்களை காணலாம். ஒரு வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்க நான்கு 'எம்' அவசியம். அதாவது பணம், மூலப்பொருட்கள், மனித ஆற்றல் மற்றும் கட்டுமான மேலாண்மை ஆகியவையாகும்.

தரமான மூலப்பொருட்கள்

கட்டுமான பட்ஜெட்டுக்கு பணம் ஏற்பாடு செய்யாமல் விருப்பப்படி வீடு கட்ட முடியாது. ஆள் பலம் எவ்வளவு இருந்தாலும் ஒருங்கிணைப்பு, கட்டுமான மேலாண்மையின்றி பணிகளை திறமையாக செய்யலாம். சிறிய, பெரிய பட்ஜெட் கட்டுமானமாக இருந்தாலும் தகுந்த நேரத்தில் சரியான தரமுள்ள மூலப்பொருட்கள் பணியிடத்திற்கு வந்து சேர்வதற்கு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் முக்கியமான விஷயம்.

விரும்பியபடி கட்டுமானம்

லேபர் கான்ட்ராக்ட் முறையில் செயல்படும் உரிமையாளர் விரும்பியபடி தரமான மூலப் பொருட்கள் பணிகளில் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதோடு, கையிருப்பு பணத்திற்கு ஏற்ப கட்டுமான பணி மெதுவாக, சில வாரங்கள் பின் பணிகளை செய்ய சொல்லவோ வாய்ப்பு உள்ளது. கான்ட்ராக்டருக்கு தக்க காலங்களில் பணம் தரவேண்டும் என்ற அவசியம் இல்லாத நிலையில் கட்டுமான பணிகளை அவரது விரும்பியபடி மெதுவாக செய்யலாம்.

கட்டுமான தொழில்நுட்பம்

பட்ஜெட்டில் மூலப்பொருட்களை பயன்படுத்தும் போது பணியாளர்கள் சரியாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். நாம் கட்டுமான தொழிலில் உள்ள நுட்பங்களை அறிய இயலாத நிலையில், தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டறிவது சிரமம். இந்நிலையில் அனுபவமுள்ள பொறியாளரை கட்டுமான ஆலோசகராக நியமிக்கலாம். கட்டுமான கால அளவு பணி தரம், சிக்கனம் அவரது வழிகாட்டுதலுடன் கடைபிடிக்க வேண்டும். அதனால் கட்டடம் உறுதி, ஆயுள் நீடிக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X