இந்தியாவில் 84.89 கோடி பேருக்கு தடுப்பூசி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 84.89 கோடி பேருக்கு தடுப்பூசி

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021
Share
புதுடில்லி: இந்தியாவில் மேலும் 29,616 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது, 28 ஆயிரம் பேர் நலமடைந்தனர்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று 29,616 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,24,419 ஆனது. தற்போது 3,01,442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், 28,046 பேர்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்,  தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 29,616 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது, 28 ஆயிரம் பேர் நலமடைந்தனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று 29,616 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,24,419 ஆனது. தற்போது 3,01,442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news


மேலும், 28,046 பேர் குணமடைந்தனர். இதன் மூலம், கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,28,76,319 ஆக அதிகரித்தது. மேலும் 290 பேர் உயிரிழந்ததால், கோவிட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4,46,658 ஆனது.

நேற்றைய பாதிப்பு, இறந்தவர்கள் எண்ணிக்கையில், கேரளாவில் மட்டும் 17,983 பேர் பாதிக்கப்பட்டனர். 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று 71,04,051 பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம், இதுவரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 84,89,29,160 ஆக அதிகரித்து உள்ளது.

தற்போது, கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களில் 0.90 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்கள் விகிதம் 97.78 சதவீதம் ஆகும். மார்ச் 2020க்கு பிறகு இதுவே அதிகம் ஆகும். தற்போது, தினமும் கோவிட் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 1.86 சதவீதமாகவும், வாரந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 1.99 சதவீதமாகவும் உள்ளது. இந்த விகிதம் கடந்த 92 நாட்களாக 3 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. இறப்பு விகிதம் 1.33 சதவீதமாக உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X