பொது செய்தி

இந்தியா

ஒடிசாவை தாக்கும் 'குலாப்' புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: 'வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று (செப்., 24) காலை உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுவடைந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு

புதுடில்லி: 'வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று (செப்., 24) காலை உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுவடைந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரம் இடையே நாளை (செப்., 26) கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.


latest tamil news



சேதம் இருக்காது!


குறிப்பாக, விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே கலிங்கப்பட்டினம் அருகில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்கள், தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் பலத்த மழை பெய்யும்; உள் மாநிலங்களிலும் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த புயலால் அதிகமான சேதாரங்கள் இருக்காது.இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ‛குலாப்' என்ற பெயர் பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்தியில் குலாப் என்றால் ரோஜா மலர் எனப் பொருள்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
25-செப்-202112:21:02 IST Report Abuse
A.George Alphonse "குலாப்" பட்டய கிளப்புதோ?சடசடன்னுக்கு மழையை பொழிந்துவிட்டு போகிறதோ?பயமாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X