சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் கடந்த 23 ம் தேதி இரவு முதல் ஒரே நேரத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் கடந்த 36
தமிழகம், ரவுடிகள், போலீஸ், சோதனை, கைது

சென்னை: தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் கடந்த 23 ம் தேதி இரவு முதல் ஒரே நேரத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் கடந்த 36 மணி நேரத்தில் 15,370 பழைய குற்றவாளிகளிடம் சோதனை நடந்தது. அதில், 2,512 பேர் கைது செய்யப்பட்டனர்.


latest tamil newsஅவர்களில் 244 பேர், நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடிவாரண்ட் படி கைது செய்யப்பட்டனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 733 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 1,927 பேரிடம் இருந்து உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.


latest tamil newsகைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 நாட்டுத்துப்பாக்கிகள், 929 கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் என மொத்தம் 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொலை குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு எதிரான போலீசாரின் இந்த கடுமையான நடவடிக்கை தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
25-செப்-202112:34:44 IST Report Abuse
Swaminathan Chandramouli புதிய மொந்தை பழைய சரக்கு. தற்கால நிலையில் நடக்கும் மிக பெரிய குற்றங்கள் கொலைகள், சிறார் கற்பழிப்பு காவலர் செய்யும் திருட்டுகள் வாங்கும் லஞ்சங்கள் கோடி கணக்கான ரூபாய்கள் பெருமான போதை பொருட்கள் கடத்தல் இவற்றில் போலீஸ் துறை கவனம் செலுத்த வேண்டும் கஞ்சா கடத்தல் மிக அதிக அளவில் தமிழகத்தில் நடை பெறுகிறது அரசியல் வாதிகள் இந்த மாதிரி குற்றங்களை கட்சி பேதம் இன்றி நிறைவேற்றுகிறார்கள் ஆனால் தப்பித்து விடுகிறார்கள்
Rate this:
Cancel
25-செப்-202112:15:50 IST Report Abuse
Gopalakrishnan S ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி அவர்கள் சைலேந்திரபாபுவை மூன்று தினங்கள் முன்பு வரவழைத்து கடுமையான உத்தரவு பிறப்பித்ததின் பலன். அரசியல்வாதிகளை ஆளுனராக நியமித்திருந்தால் அவர்கள் முதல்வரை அழைத்து வேண்டுகோள் விடுத்திரப்பார்கள். இவர் சிறந்த போலீஸ் அதிகாரியாக இருந்ததால் யாருடன் விவாதித்தால் பலன் கிடைக்கும் என்று நன்கு அறிந்து செயல்பட்டுள்ளார். இதே சைலேந்திரபாபு இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தார் ?
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
25-செப்-202112:12:14 IST Report Abuse
Dhurvesh இவளவு பேரை பழனியும் பண்ணீரும் BJP யம் இந்த 4 வருடமா வளர்த்து வந்து உள்ளேர்கள், ஜெயா இருக்கும்வரை ஒரே சொன்னார் TN ஒரு ரவுடி இருக்கநும் அது நாந்தான் என்று பயந்து எல்லா ரௌடியும் ஆந்திரா ஓடி விட்டான் என்று, இப்போ தலைவர் வேட்டை ஆடி இருக்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X