பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் கோயிலில் மஹா சங்கடஹரசதூர்த்தி

Added : செப் 25, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் கோயிலில் மஹா சங்கடஹரசதுார்த்தி நிகழ்வாக சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றதுகரூர் நகரின் மையப்பகுதியில், தேர்வீதியில் அமைந்து மக்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் கோயிலில் மஹா சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகருக்கு, பால், தயிர், சந்தனம், மஞ்சள்,
ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் கோயிலில் மஹா சங்கடஹரசதூர்த்தி

கரூர்: கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் கோயிலில் மஹா சங்கடஹரசதுார்த்தி நிகழ்வாக சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றது
கரூர் நகரின் மையப்பகுதியில், தேர்வீதியில் அமைந்து மக்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் கோயிலில் மஹா சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகருக்கு, பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு விஷேச அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
இதையடுத்து, தங்க அங்கியால் அலங்கரிக்கப்பட்டு விஷேச சிறப்பு மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட மூலவர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகருக்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, கற்பூர ஆரத்தி உள்ளிட்ட விஷேச ஆரத்திகளும் அதனை தொடர்ந்து, மஹா தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கொரோனா காலம் என்பதால், வெள்ளி, சனி, ஞாயிறு கோயில்கள் திறக்க அனுமதி இல்லாததால், கோயில் மூடப்பட்டு பக்தர்கள் இல்லாமல் கோயில் நிர்வாகம் மூலம் மூலவர் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X