பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி மண் எடுக்க தமிழக அரசு அனுமதி

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லாமல் மண் எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.சாலை, பொதுப்பணித்துறை மற்றும் பிற அரசு பணிகள் தடையின்றி நடக்க சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்க கடந்த ஜூலையில், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள்
சுற்றுச்சூழல், மண், தமிழக அரசு, அனுமதி

சென்னை: செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லாமல் மண் எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சாலை, பொதுப்பணித்துறை மற்றும் பிற அரசு பணிகள் தடையின்றி நடக்க சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்க கடந்த ஜூலையில், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று இந்த அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம். மண் எடுப்பதற்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று மண் எடுக்கலாம். 1.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


latest tamil news




மண் எடுக்கும் இடத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் இருக்க மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற சாலைகளில் இருந்து 10 மீ., வரையிலும், தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே சாலை, நீர்நிலைகளில் இருந்து 50 மீ., வரையிலும் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் பிற்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து மண் எடுப்பதற்கான அனுமதியை கலெக்டர்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
25-செப்-202120:49:30 IST Report Abuse
SUBBU இப்படித்தான் படிப் படியாக ஆரம்பிப்பார்கள்.கூடிய விரைவில் ஆறுகளில் மணல் அள்ளி கொள்ளையடிக்க இது ஒரு வெள்ளோட்டம்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
25-செப்-202120:12:56 IST Report Abuse
தமிழ்வேள் செங்கல் சூளைக்கு மண் எடுக்கிறோம் என்றபெயரால் , தமிழகத்தின் ஆறு குளம் ஏரி கால்வாய் பட்டா நிலம் புறம்போக்கு என அனைத்திலும் திருட்டு திமுக தலிபான்கள் புகுந்து விளையாட போகிறார்கள் ...1.5 மீட்டர் ஆழம் தோண்ட ஜெ சி பி , பொக்லைன் வரிசையாக வரும் ....டாரஸ் லாரிகளில் இந்த மணல் [சூலை மண் ] வெளிமாநிலங்களுக்கு விற்கப்பட்டு அறிவாலய கஜானா நிரம்பும் ..பத்து வருட வறட்சியை எப்படி போக்க ? இந்த லட்சணத்தில் 2024 இல் தேர்தல் என்று வேறு கடுக்காய் கொடுக்கிறார்கள் ..முடிந்த வரை சுரண்டவேண்டியதுதான் ......
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
25-செப்-202118:11:11 IST Report Abuse
a natanasabapathy கட்சிக்காரன் பிழைக்க வேண்டாமா 10 வருடங்கள் காய்ந்து கிடந்தவர்கள் அள்ளிக்கொண்டு செல்லட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X