சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி மண் எடுக்க தமிழக அரசு அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி மண் எடுக்க தமிழக அரசு அனுமதி

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (7)
Share
சென்னை: செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லாமல் மண் எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.சாலை, பொதுப்பணித்துறை மற்றும் பிற அரசு பணிகள் தடையின்றி நடக்க சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்க கடந்த ஜூலையில், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள்
சுற்றுச்சூழல், மண், தமிழக அரசு, அனுமதி

சென்னை: செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லாமல் மண் எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சாலை, பொதுப்பணித்துறை மற்றும் பிற அரசு பணிகள் தடையின்றி நடக்க சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்க கடந்த ஜூலையில், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று இந்த அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம். மண் எடுப்பதற்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று மண் எடுக்கலாம். 1.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


latest tamil news




மண் எடுக்கும் இடத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் இருக்க மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற சாலைகளில் இருந்து 10 மீ., வரையிலும், தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே சாலை, நீர்நிலைகளில் இருந்து 50 மீ., வரையிலும் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் பிற்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து மண் எடுப்பதற்கான அனுமதியை கலெக்டர்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X