அமெரிக்காவின் நன்றியற்ற தன்மை, இரட்டை நிலைப்பாட்டிற்கு பாக்., பலியாகிவிட்டது: இம்ரான்| Dinamalar

அமெரிக்காவின் நன்றியற்ற தன்மை, இரட்டை நிலைப்பாட்டிற்கு பாக்., பலியாகிவிட்டது: இம்ரான்

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (37)
Share
இஸ்லாமாபாத்: 'அமெரிக்காவின் நன்றியற்ற தன்மை மற்றும் இரட்டை நிலைப்பாட்டுக்கு பாகிஸ்தான் பலியாகிவிட்டது' என, ஐ.நா., பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.ஐ.நா., பொதுக் கூட்டத்தில் பாக்., பிரதமர் இம்ரான் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. அவரது பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒலிபரப்பப்பட்டது. அதில் அவர் தெரிவித்து உள்ளதாவது:அமெரிக்காவால்

இஸ்லாமாபாத்: 'அமெரிக்காவின் நன்றியற்ற தன்மை மற்றும் இரட்டை நிலைப்பாட்டுக்கு பாகிஸ்தான் பலியாகிவிட்டது' என, ஐ.நா., பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

ஐ.நா., பொதுக் கூட்டத்தில் பாக்., பிரதமர் இம்ரான் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. அவரது பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒலிபரப்பப்பட்டது. அதில் அவர் தெரிவித்து உள்ளதாவது:latest tamil newsஅமெரிக்காவால் அதிகமாக பாதிக்கப்பட்டது பாகிஸ்தான் தான். இரட்டை கோபுரம் தகர்ப்புக்குப்பின், அமெரிக்கா தொடர்ந்த போரில் பாகிஸ்தானும் சேர்ந்தபோதே அந்த பாதிப்பு தொடங்கியது. ஆப்கனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அகற்ற, முஜாகிதீன்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை கதாநாயகன் ஆக்கியது அமெரிக்காதான்.

தலிபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் நாங்கள் சேர்ந்ததற்கு நாங்கள் கொடுத்த விலை 80 ஆயிரம் பாகிஸ்தான் மக்களின் உயிர். அமெரிக்காவுக்கு உதவிய எங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அமெரிக்காவின் நன்றியற்ற தன்மை மற்றும் சர்வதேச இரட்டை நிலைப்பாட்டுக்கு பாகிஸ்தான் பலியாகிவிட்டது.


latest tamil newsஆப்கனில் தலிபான்கள் மீண்டும் வலுப்பெற்றதற்கு பாகிஸ்தான் தான் காரணம், அவர்களுடன் பாகிஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்தது எனக் குற்றம்சாட்டினார்கள்.தலிபான்கள் ஆட்சியை சர்வதேச சமூகம் ஒதுக்கிவைப்பதற்கு பதிலாக, மக்களைப் பாதுகாக்க வலிமைப்படுத்த வேண்டும். தலிபான்கள் ஆட்சியில் நிச்சயம் மனித உரிமைகள் காக்கப்படும், முழுமையான அரசு ஏற்பட்டு, தீவிரவாதிகள் ஆப்கன் மண்ணை பயன்படுத்த முடியாத வகையில் தடுக்கப்படும்.


latest tamil newsஇந்தியாவில் இந்துத்துவா சிந்தனை கொண்ட அரசு பாசிச சிந்தனையுடன், 20 கோடி முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறையையும், அச்சத்தையும் கட்டவிழ்த்துவிட்டு உள்ளது. பாகுபாடு கொண்ட குடியுரிமைச் சட்டங்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருக்கின்றன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X