பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.300 கோடி வருமானத்தை மறைத்த நிதி நிறுவனங்கள்: வருமான வரித்துறை கண்டுபிடிப்பு

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: ‛‛சென்னையைச் சேர்ந்த 2 நிதி நிறுவனங்கள் ரூ.300 கோடிக்கு மேல் வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது,'' என்று வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.நாடு முழுதும், வரி ஏய்ப்பு, ஹவாலா பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி, டில்லி, ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களில், சமீப நாட்களாக
சென்னை, வருமானவரித்துறை, வருமானம், 300 கோடி, மறைப்பு

சென்னை: ‛‛சென்னையைச் சேர்ந்த 2 நிதி நிறுவனங்கள் ரூ.300 கோடிக்கு மேல் வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது,'' என்று வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

நாடு முழுதும், வரி ஏய்ப்பு, ஹவாலா பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி, டில்லி, ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களில், சமீப நாட்களாக வருமான வரி அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி, வரி ஏய்ப்பு சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர்.

இந்த வகையில் சென்னையில், சிறிய அளவிலான நிதி நிறுவனங்கள், வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்வோர் வாயிலாக, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடப்பதாக, வரித்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், சென்னையில் உள்ள வட்டிக்கடைக்காரர்கள், சிறியளவில் நிதி நிறுவனம் நடத்துவோர் சம்பந்தப்பட்ட இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள், கடந்த 23ம் தேதி காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் .சென்னை, புரசைவாக்கம், தாசப்பிரகாஷ், எழும்பூர், சவுகார்பேட்டை, பாரிமுனை, தி.நகர் உட்பட 32 இடங்களில், 150க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.


latest tamil news



இந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னையை சேர்ந்த 2 நிதி நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.300 கோடி வரை வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 2 நிறுவனங்களும் தொழிலதிபர்கள், பெரு நிறுவனங்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்தது தெரியவந்தது. நிதிநிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2 நாட்களாக நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
26-செப்-202117:59:44 IST Report Abuse
J.Isaac சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தவறுகளுக்கு துணைபோகிற ஆடிட்டர்களை யாரும் விமர்சிப்பதில்லை.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
26-செப்-202116:34:49 IST Report Abuse
J.Isaac முதலில் ஆடிட்டர்களின் அலுவலகங்கள் சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து விதமான வரி ஏய்ப்புகளுக்கும் காரணம் ஆடிட்டர்கள் தான். ஆனால் எந்த அரசும் அவர்களை பற்றி வாயை திறப்பதே இல்லை
Rate this:
Cancel
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
25-செப்-202119:42:40 IST Report Abuse
Mani iyer Vijayakumar நமது பழைய நிதியமைச்சர் பினாமி யாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X