பொது செய்தி

தமிழ்நாடு

தலைமை செயலர் காரை வழிமறித்து மனு வழங்கிய மக்கள்

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: பூண்டி ஏரியை பார்வையிடச் சென்ற தலைமைச் செயலர் இறையன்பு காரை வழிமறித்து பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பூண்டி கிராமத்திலுள்ள பொது மயானப்பாதை பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தக் கிராம மக்கள் இறந்த உடல்களை 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றி மயானத்திற்கு எடுத்துச் செல்லும் அவல நிலை தொடர்ந்து
தமிழகம், தலைமை செயலர், பூண்டி, கார் வழிமறிப்பு, மக்கள் மனு வழங்கல்

சென்னை: பூண்டி ஏரியை பார்வையிடச் சென்ற தலைமைச் செயலர் இறையன்பு காரை வழிமறித்து பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூண்டி கிராமத்திலுள்ள பொது மயானப்பாதை பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தக் கிராம மக்கள் இறந்த உடல்களை 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றி மயானத்திற்கு எடுத்துச் செல்லும் அவல நிலை தொடர்ந்து உள்ளது.

இந்நிலையில் நேற்று தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.


latest tamil news


அப்போது பூண்டி ஏரியில் ஆய்வு மேற்கொள்ள சென்ற இறையன்புவின் வாகனத்தை பூண்டி கிராம மக்கள் வழிமறித்தனர். உடனே இறங்கிச் சென்ற தலைமைச் செயலர் இறையன்பு, பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் இறையன்பு காலில் விழுந்தார். அவரை தடுத்து நிறுத்திய தலைமைச் செயலர் இறையன்பு மயான பாதை ஆக்கிரப்பு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

அதன் பின்னர் நடந்து சென்று பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் திரும்பிச் செல்லும் போதும், அவ்வழியில் நின்றிருந்த பூண்டி கிராம மக்களிடம் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என இறையன்பு உறுதியளித்துச் சென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202107:26:53 IST Report Abuse
அப்புசாமி இனிமே ஆய்வு அது இதுன்னு போவியா, போவியா?
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
25-செப்-202116:59:57 IST Report Abuse
Duruvesan யேசப்பா அன்பானவர்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
25-செப்-202115:54:24 IST Report Abuse
unmaitamil சினிமாவை பார்த்து அதுவே உண்மை என சில விவரமில்லாத மக்கள் நம்புகிறார்கள். முதல்வன் சினிமாவில் கதாநாயகன் ரவுடிகளுடன் சண்டைபோட்டு ரோட்டில் ஜட்டியுடன் இழுத்துச்செல்வார். அதுபோல் எந்த முதல்வரோ, Chief, செஸ்ரட்டியோ, DGP,யோ செய்ய மாட்டார்கள், செய்ய முடியாது. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X