இந்தியாவில் 5 பைடன்கள்: அமெரிக்க அதிபர் ஜோக்; பதிலடி கொடுத்த மோடி| Dinamalar

இந்தியாவில் 5 பைடன்கள்: அமெரிக்க அதிபர் ஜோக்; பதிலடி கொடுத்த மோடி

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (28)
Share
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேற்று சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில், 'அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில், இந்தியாவில் 5 பைடன்கள் இருப்பதாகவும், அதில் ஒருவர் இந்தியப் பெண்ணை மணம் செய்ததாகவும் என்னை பற்றிய ஜோக்குகள் இந்தியாவில் பரவின' எனக் கூறி அமெரிக்க அதிபர் ஜோ

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேற்று சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.latest tamil newsஅப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில், 'அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில், இந்தியாவில் 5 பைடன்கள் இருப்பதாகவும், அதில் ஒருவர் இந்தியப் பெண்ணை மணம் செய்ததாகவும் என்னை பற்றிய ஜோக்குகள் இந்தியாவில் பரவின' எனக் கூறி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெகுவாக சிரித்துள்ளார்.

அதற்கு உடனடியாக 'கவுன்டர்' கொடுத்த பிரதமர் மோடி, 'இந்தியாவில் இருக்கும் பைடன்களை தேட, உங்களுக்கு உதவுவதற்காகவே நான் ஆவணங்களோடு வந்திருக்கிறேன்' என, பதிலுக்கு ஜோக் அடித்தார்.

அப்போது பேசிய ஜோ பைடன், 'எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் 1972ல் எனது 28 வயதில், செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பதவியேற்புக்கு முன், மும்பையில் பைடன் என்ற நபரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அடுத்த நாள் பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய பத்திரிக்கைகள் இந்தியாவில் ஐந்து பைடன்கள் இருப்பதாக கூறின. (இதைக் கேட்டு பிரதமர் மோடி பலமாகச் சிரித்தார்.)


latest tamil newsஅதேபோல், கிழக்கிந்திய தேநீர் நிறுவனத்தில் கேப்டனாக, ஜார்ஜ் பைடன் இருப்பதை நான் கண்டுபிடித்தேன். அவர் இந்தியாவில் தங்கியிருந்து ஒரு இந்தியப் பெண்ணை மணந்தார். ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.இவ்வாறு பைடன் தெரிவித்தார்.latest tamil newsபிரதமர் மோடி பைடனிடம் கூறுகையில், 'நீங்கள் பைடன் (பிடன்) குடும்பப் பெயர்களைப் பற்றி பேசினீர்கள். நீங்கள் அதை என்னிடம் முன்பே குறிப்பிட்டிருந்தீர்கள். அதுகுறித்து நான் ஆவணங்களை தேடி கொண்டுவந்துள்ளேன். ஒருவேளை அந்த ஆவணங்கள் ஏதேனும் உங்களுக்கு பயன் தரக்கூடும்' என்றார். அதற்கு 'நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என, பைடன் தெரிவித்தார்.

இவ்வாறு பைடனும் பிரதமர் மோடியும் தொடர்ந்து நகைச்சுவையாகப் பேசியதால், செய்தியாளர் சந்திப்பில் சிரிப்பு சத்தம் ஓய நீண்ட நேரம் ஆனது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X