பொது செய்தி

இந்தியா

ஒ.பி.சி., பட்டியலில் 3ம் பாலினத்தவர்கள்: மத்திய அரசு முடிவு

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: திருநங்கைகள், திருநம்பிகளை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய அமைச்சரவைக்கு,மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், திருநங்கைகளை 3ம் பாலினத்தவர்களாக அங்கீகரித்ததுடன், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருத
இந்தியா, ஒபிசி, பட்டியல், 3ம் பாலினத்தவர், மத்திய அரசு, முடிவு

புதுடில்லி: திருநங்கைகள், திருநம்பிகளை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய அமைச்சரவைக்கு,மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், திருநங்கைகளை 3ம் பாலினத்தவர்களாக அங்கீகரித்ததுடன், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருத வேண்டும். கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டின் பலன்களை 3ம் பாலினத்தவர்களும் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், திருநங்கைகளை, ஓ.பி.சி., பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை தயாரித்துள்ள சமூக நீதித்துறை அமைச்சகம், அதனை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து உள்ளது.


latest tamil news


மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னர், பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். பின்னர், ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்த பின்னர் அமலுக்கு வரும். கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி., பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் திருநங்கைகளும் பயன்பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சமூக நீதித்துறை அமைச்சகம் பல்வேறு அமைச்சகம் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசிய கமிஷன் அமைப்பிடம் விரிவாக ஆலோசனை நடத்தியது. அப்போது யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற கதையாக ஏற்கனவே OBC க்களுக்கு 27 % ஒதுக்கீட்டில் உள்ள இடங்களை நயவஞ்சகமாக அபகரிக்கும் எத்தான வேலையிது கொடுப்பவர்கள் OC க்கு உள்ள அந்த ஐம்பது சதவீதத்திலிருந்து வழங்கி தாராளம் காட்டலாமே
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-செப்-202115:53:50 IST Report Abuse
அசோக்ராஜ் தவறு. இவர்களால் ஒழுங்கு முறையில் பணியாற்ற முடியாது. அலுவலக சூழல் கெடும்.
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-202115:05:48 IST Report Abuse
Krishna They should have been given SC or St as they need more opportunities to grow. Obc would not change.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X