பொது செய்தி

இந்தியா

கேரளாவில் கனமழை: 4 மாவட்டத்துக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.கேரள வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது:வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும். இன்று ஆலப்புழா, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம்

திருவனந்தபுரம்: கேரளாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.



latest tamil news



கேரள வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது:வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும். இன்று ஆலப்புழா, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதனால் அம்மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை கொல்லம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



இதனால், வருவாய், பேரிடர் மீட்பு படையினர் அடுத்த சில நாட்களுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் மலையோர மாவட்டங்களான இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202119:19:27 IST Report Abuse
Ram Pollachi இன்றும், நாளையும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் நாளை மறுநாள் பந்த் ரோட்டுக்கு யாரும் போக வேண்டாம் சரியா போச்சு தொடர் விடுமுறை என்ஜாய்!
Rate this:
Cancel
25-செப்-202116:44:15 IST Report Abuse
ஆரூர் ரங் மேற்கு தொடர்சசி மலைக் காடுகளை அழித்து ரப்பர் காப்பி தேயிலை தோட்டங்களை அமைதததும் 🤔குவாரி மூலம் மலைகளை காணாமலடித்ததும்😪 இது போன்ற சீரழிவுக்கு காரணம். மீதியுள்ள இயற்கையைக் காக்க கஸ்தூரி ரங்கன் குழு கொடுத்த அறிக்கையை கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் ஏற்க மறுக்கின்றன.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
25-செப்-202121:58:56 IST Report Abuse
Amal Anandanஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி பாராளுமன்றம் கட்டுவதை எதிர்த்தால் தேசதுரோகி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X